பாடல் #39124
ஆண்டானைக் கண்டேன்
🔤 Aantaanaik Kantaen
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டானைக் கண்டேன் ஆக் கொட்டகத்திலே ஆண்டானைக் கண்டேன். நீண்டக் கிருபை வைத்தெனை மீண்ட பரம நாட். 1.சுத்தக் கிருபைத் தயாப நித்தியப்பரம தேவ துத்திய மகத்துவராச சத்திய கிறிஸ்துவை. 2. துங்கப் பராபரனெம் பங்குக் கனுக்கிரகித்த சிங்கத் தவிது யூதர் சங்கத்தரசனை. 3. அக்கிரமத் தானிறைந்தவுக் கிரத்துலகை முற்றும் நிற்கிரகிக்காமல் வந்த சக்கராதிபதியை. 4. தன்னிகரற்றதோ உன்னத வஸ்துவோ என்ன மகத்துவ மோ முன்னணை மீதிலே. 5. மந்தைப் புறத்திலோ விந்தைப் புல்லுக்குள்ளோ எந்தைக் குடுத்தினது கந்தைத் துணியதோ. 6. பண்டு வினையதோ தொண்டர் பெருமையோ அண்டர் பிரமிக்கவோ கொண்டதிக் கோலமோ. 7. தூதர்கள் கொண்டாட்டிலே மாதவர் தந்தேட்டிலே வேத நாயகன் பாட்டிலே பாதிரா விருட்டிலே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aantaanaik Kantaen Aak Kottakatthilae Aantaanaik Kantaen. Neendak Kirupai Vaitthenai Meenda Parama Naat. 1.sutthak Kirupaith Thayaaba Nitthiyapparama Thaeva Thutthiya Makatthuvaraasa Satthiya Kiristhuvai. 2. Thunggap Paraabaranem Pangkuk Kanukkirakittha Singgath Thavithu Yoodhar Sanggattharasanai. 3. Akkiramath Thaaniraindhavuk Kiratthulakai Murrum Nirkirakikkaamal Vandha Sakkaraathibathiyai. 4. Thannigarartratho Unnatha Vasthuvo Enna Makatthuva Mo Munnanai Meethilae. 5. Manthaip Puratthilo Vinthaip Pullukkullo Enthaik Kututthinathu Kanthaith Thuniyatho. 6. Pantu Vinaiyatho Thondar Perumaiyo Andar Piramikkavo Kondathik Kolamo. 7. Thoodharkal Kontaattilae Maadhavar Thanthaettilae Vaedha Naayakan Paattilae Paathiraa Viruttilae.