பாடல் #39123
ஆதாமின் பாவத்தாலே அரூபனுரூபமான
🔤 Aathaamin Paavatthaalae Aroobanuroobamaana
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதாமின் பாவத்தாலே அரூபனுரூபமான அதிசயமிதோ பாரும். மாதேவை புத்திரரான மானிடர் குழாங்களே நீர் வல்லமைப் பிதாவி னோரே மைந்தனைச் சந்திக்க வாரும்.ஆதா 1.ஆதிபிதாவின் கிருபாசனத்தைத் துறந்தார் அழகான மோட்ச செல்வ பாக்கியத்தை மறந்தார் பாதகந்தீர வேண்டி பெத்தலையிற் சிறந்தார் பராபரவஸ்து வானோர் பாலனாகப் பிறந்தார். 2. உன்னத வஸ்துவா னோருலகத்தை நேசித்தார் ஒப்பிலாத் தேவ தேவன் மனுஷரையாசித்தார் தன்னொளிவை விளங்கத் தானே பிரகாசித்தார் சாதிகளுக்குத் தயவாயுப தேசித்தார். 3. மந்தையாயர் சந்திக்கச் சந்தோடமே விண்டார் வான நாட்டைப் பிரிந்து மாட்டுக்கொட்டிலைக் கண்டார் விந்தைத் திரு முதலார் கந்தைத் துணியைக் கொண்டார் வேத காரணர் தானேமேவி முலைப் பாலுண்டார். 4. கன்னி மரியத் தாயார் சின்னக் குமாரனானார் காரிருள் சூழ்ந்த கொடுங்கானகத்துக்குப் போனார் மன்னன் றவீதரசன் வங்கிஷத் திருக் கோனார் மாறுதலன்றி யென்றுந் தானே யிருக்குந் தானார். 5. விண்ணவர் தேட்டாரே மிக்க கொண்டாட்டாரே வேதநாயகன் சொன்ன பாட்டையுங் கேட்டாரே மண்ணுலகனைத்தையும் வலிமையாய் மீட்டாரே வந்தாரைத் தள்ளி விடமாட்டாரே நாட்டாரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathaamin Paavatthaalae Aroobanuroobamaana Athisayamitho Paarum. Maathaevai Putthiraraana Maanidar Kuzhaanggalae Neer Vallamaip Pithaavi Norae Maindhanaich Santhikka Vaarum.aathaa 1.aathipithaavin Kirupaasanatthaith Thuranthaar Azhakaana Motsa Selva Paakkiyatthai Maranthaar Paadhakantheera Vaenti Petthalaiyir Siranthaar Paraabaravasthu Vaanor Paalanaagap Piranthaar. 2. Unnatha Vasthuvaa Norulakatthai Naesitthaar Oppilaath Thaeva Devan Manusharaiyaasitthaar Thannolivai Vilanggath Thaanae Pirakaasitthaar Saathigalukkuth Thayavaayuba Thaesitthaar. 3. Manthaiyaayar Santhikkach Santhodamae Vintaar Vaana Naattaip Pirinthu Maattukkottilaik Kantaar Vinthaith Thiru Mudhalaar Kanthaith Thuniyaik Kontaar Vaedha Kaaranar Thaanaemaevi Mulaip Paaluntaar. 4. Kanni Mariyath Thaayaar Sinnak Kumaaranaanaar Kaarirul Soozhndha Kotungkaanakatthukkup Ponaar Mannan Raveedharasan Vangkishath Thiruk Konaar Maarudhalanri Yenrun Thaanae Yirukkun Thaanaar. 5. Vinnavar Thaettaarae Mikka Kontaattaarae Vaedhanaayakan Sonna Paattaiyung Kaettaarae Mannulakanaitthaiyum Valimaiyaay Meettaarae Vanthaaraith Thalli Vidamaattaarae Naattaarae.