பாடல் #39122
ஆதி பிதாவின் சுதன்
🔤 Aathi Pithaavin Sudhan
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதி பிதாவின் சுதன் பிறந்தார் கன்னியாஸ்திரியிடமே சுதன் பிறந்தார் தேவரூப சொரூபானந்த சோதி. 1.சாதிகள் செய்த கொடும் பாதகமே தொலைக்கத் தற்பரானந்த குருநீதன் (சுயதற்பரா) உயர் முப்பொருளொன்றாஞ் சத்திய வேத னெங்கள் சாமி யேசு நாதன். 2. வானம் புவியுந்தந்த ஞானந்தயை நிறைந்த வல்லமைச் சுயாதிபத்தியராயன் (சருவ வல்) ஏழை மனுடர்க்கதி பிரிய நேயன் தயை வைத்த சகாயன். 3. ஏதன் சிங்காரக் காவிலா தன் துரோகத்தாலே எல்லாத்தையும் படைத்தவஸ்து (ஒகோ) மகா ஏழை நராட்களினந் திஸ்து நமதிறைவனேசுக் கிறிஸ்து. 4. தன்னிகரில்லாத வோருன்னதமான தேவன் மன்னன் றவீது வங்கிஷ நேசன் (யூதர் மன்னன்) திரு வசனப் பிரதாப சத்திய வாசனிம்மானுவேல் ராசன். 5. மந்தையாயர்கள் கூட சந்தித்தரசர் தேட அந்தரத்திற் சுரர் நின்றாடப் (பணிந்தந்தா) சதா னந்தனந்த சோபனம் பாட பரமானந்தம் நீட. 6. நெல்லை வேதநாயகன் சொல்லுங் கிருபைத் தாயகன் வல்லப ஞான மணவாளன் (சருவவல்) எங்கும் பல்லுயிர் பணியுந்துணைத் தாளன்நித்திய பரமகுணாளன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathi Pithaavin Sudhan Piranthaar Kanniyaasthiriyidamae Sudhan Piranthaar Thaevarooba Soroopaanandha Sothi. 1.saathigal Seytha Kotum Paadhakamae Tholaikkath Tharparaanandha Kuruneedhan (suyatharparaa) Uyar Mupporulonraanj Satthiya Vaedha Nenggal Saami Yaesu Naadhan. 2. Vaanam Puviyundhandha Njaanandhayai Niraindha Vallamaich Suyaathibatthiyaraayan (saruva Val) Aezhai Manudarkkathi Piriya Naeyan Thayai Vaittha Sakaayan. 3. Aedhan Singkaarak Kaavilaa Than Thurogatthaalae Ellaatthaiyum Pataitthavasthu (oko) Makaa Aezhai Naraatkalinan Thisthu Namathiraivanaesuk Kiristhu. 4. Thannigarillaadha Vorunnathamaana Devan Mannan Raveethu Vangkisha Naesan (yoodhar Mannan) Thiru Vasanap Pirathaaba Satthiya Vaasanimmaanuvael Raasan. 5. Manthaiyaayarkal Kooda Santhittharasar Thaeda Andharatthir Surar Ninraadap (panindhanthaa) Sathaa Nandhanandha Sobanam Paada Paramaanandham Needa. 6. Nellai Vaedhanaayakan Sollung Kirupaith Thaayakan Vallapa Njaana Manavaalan (saruvaval) Engkum Palluyir Paniyunthunaith Thaalannitthiya Paramakunaalan.