பாடல் #39121
சுதன் பிறந்தார்
🔤 Sudhan Piranthaar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுதன் பிறந்தார் சுதன் பிறந்தார். துதி மிகு தேவ சுதன் பிறந்தார். துதி-சுதன் 1.சருவ தயாப சகாயப் பிரதாப கிருபைப் பிதாவின் தற்சுவாப. துதி-சுதன் 2. சரீரமிலாத சதாபதி வினோதப் பர சொரூபக்குணாதீத. துதி-சுதன் 3. பரமாபிஷேகப் பக்கிஷ சினேகப் பெருமான் மகத்துவத் திரியேக. துதி-சுதன் 4. வானாதிகார மகிமைச் சிங்கார ஞான கர நரவ தார. துதி-சுதன் 5. மனுடரை மீட்க மறு பிறப்பாக்க கனி வினை யாவையுந் தீர்க்க. துதி-சுதன் 6. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி கன்னியாஸ்திரியிடம் நீடி. துதி-சுதன் 7. பெத்தலேகே மூரில்மெய்த்தவீதின் வேரில் பத்தர்களுக்காக இப்பாரில். துதி-சுதன் 8. தேவர்கள் போற்றச் சோபனங்கள் சாற்ற மூவரசர்கள் பணிந்தேற்ற. துதி-சுதன் 9. நெல்லை வேதநாயக னேடிக் கொண்டாடப் பல்லுயிர்களுங் களித்துப் பாட.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sudhan Piranthaar Sudhan Piranthaar. Thuthi Miku Thaeva Sudhan Piranthaar. Thuthi-sudhan 1.saruva Thayaaba Sakaayap Pirathaaba Kirupaip Pithaavin Tharsuvaaba. Thuthi-sudhan 2. Sareeramilaadha Sathaabathi Vinodhap Para Soroobakkunaatheedha. Thuthi-sudhan 3. Paramaapishaegap Pakkisha Sinaegap Perumaan Makatthuvath Thiriyaega. Thuthi-sudhan 4. Vaanaathikaara Makimaich Singkaara Njaana Kara Narava Thaara. Thuthi-sudhan 5. Manudarai Meetka Maru Pirappaakka Kani Vinai Yaavaiyun Theerkka. Thuthi-sudhan 6. Innilatthai Naati Munnanaiyaith Thaeti Kanniyaasthiriyidam Neeti. Thuthi-sudhan 7. Petthalaekae Moorilmeytthaveethin Vaeril Pattharkalukkaaga Ippaaril. Thuthi-sudhan 8. Thaevarkal Portrach Sobananggal Saartra Moovarasarkal Paninthaertra. Thuthi-sudhan 9. Nellai Vaedhanaayaka Naetik Kontaadap Palluyirkalung Kalitthup Paada.