பாடல் #39120
அல்லேலூயா சந்தோடம்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
அல்லேலூயா சந்தோடம் அல்லேலூயா வென்றைக்கும் அல்லேலூயா பரனுக்கனந்த தோத்திரமாக. 1.எல்லாவஸ்து மீடேற சல்லாப தேவதிரித்துவ வல்லாளன் மைந்தனுரு வில்லான் மனுவதானார். 2. பூலோகத்தை ரட்சிக்க சாலோக பதங்கட்கும் மேலாகிய தெய்வீக மேலோகாதிபன் வந்தார். 3. பாவ வினையகல மூவுலகுமகிழ ஆவலதாக வேக தேவசுதன் பிறந்தார். 4. பேசரிதான ஞான தேசுலாவிய தேவ மேசியா வெனும் ராஜ யேசுநாதர் பிறந்தார். 5. எம்மானிலமுந் தொழ இம்மானிலமும் வாழ்க எம் மாலிவ் வேஷமாக இம்மானுவேல் பிறந்தார். 6. சாதியெல்லா மீடேற ஓதும் வாசகமதாய் நீதி நெறி தவறா வேதநாயகர் வந்தார். 7. மோட்சத்தின் நன்மையெல்லாம் சூட்சத்திலே யடைய ஆச்சரியமானவர் காட்சியாகப் பிறந்தார். 8. மதி சேர் மெய்ஞானி மார்கள் துதிசேர் பெத்தலேம் பதியிற் கதிசேர் கிறிஸ்து நாதர் அதிசயமாய்ப் பிறந்தார். 9. சாத்திரர் வந்து காண தோத்திரம் ஆஞ்சு கூறப் பாத்திபன் தாவீதேந்திரன் கோத்திரத்திற் பிறந்தார். 10. காட்டு முரட்டுமன மேட்டுத் துறட்டுச் சிந்தை போட்டு விட்டிட் டீடேற மாட்டுக்கொட்டிலில் வந்தார். 11. ஆவிதென்ன காரணம் ஆவிதென்ன மாறுதல் ஆவிதென்ன தரித்திரம் ஆவிதென்ன மகத்துவம். 12. ஆவிதுவே சிநேகம் ஆவிதுவே கிருபை ஆவிதுவே கெம்பீரம் ஆவிதுவே யானந்தம். 13. துங்க சுவிசேடப் பிரசங்கங் கேட்குஞ் சபை யோர் எங்குமிங்கித சுப மங்களமாக வாழ்க. 14. நாடுங் கிறிஸ்துவைக் கொண்டாடும் வேதநாயகன் பாடும் பதங்கள் மோட்ச வீடும் நிறைந்து வீச. குறிப்பு: ஒவ்வொரு பதங்களிலும் சீருக்குச்சீர் பல்லகத்தைப் பாடுகிறபடி இதற்கு செய்யாமல் 1, 7, 8, 9, 10, 11, 12, 13 அடிகளுக்கு மாத்திரம் பல்லகத்தை பாடலாம். ஆனால் 2-வது அடிக்கு மேலோகாதிபன் வந்தார். 3-வது அடிக்கு தேவசுதன் பிறந்தார். 4-வது அடிக்கு இயேசுநாதர் பிறந்தார். 5-வது அடிக்கு இம்மானுவேல் பிறந்தார். 6-வது அடிக்கு வேதநாயகன் வந்தார். 14-வது அடிக்கு அல்லேலூயா. அல்லேலூயா என்ற சொற்களை நாற்றீத்தும் இரட்டித்தும் பாடலாம்.