பாடல் #39115
வந்தானே தந்தைப் பிதாவின்
🔤 Vanthaanae Thanthaip Pithaavin
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்தானே தந்தைப் பிதாவின் சுந்தர மைந்தனே அந்தமாயுருவங் கொண்டு அன்புடன் சீயோனைக்கண்டு விந்தையில் சல்லாபம் விண்டு மீண்டிரட்சித் தாள வென்று 1.அங்கியு மார் பருகில் பொற்கச் சையுங்கட்டி அட்சய தேவத் திரவிய ஆரணங்கிட்டி துங்கமாய் கரத்தில் வான ராட்சிய செங்கோலைநீட்டிச் சோதிப் பிரகாச சீவரத்தின கிரீடம் சூட்டி. 2. அக்கினிக் கொழுந்த டவாய் கண்களெரிக்க ஆதித்த னெனவே முகப் பிரவை விரிக்க மிக்க சிரத்தின் ரோமம் பஞ்சினும் வெண்மை தெரிக்க மேன்மை யினெக் காளங்கள் கொண்டெழு தூதர் ஆர்ப்பரிக்க. 3. காயும் சொகு சாவுக் கொத்த கால்களிலங்க கரத்தினிலே எழு நட்சத்திரங்களிலங்க வாயிலிருந் திருபுறமும் கூர்மைப்பட்டயம் துலங்க வாருதிச் சலத்தொலியின் வார்த்தை யாலண்டம் குலுங்க. 4. வீரியத்தோடேமேக பத்திராசனத் தெட்டி மீண்டுலகை யாண்ட வேதனாட்டுக் குட்டி காரியத்தோடே சீயோன் குமாரியைக் கல்யாணங்கட்டி கனிந்து கனிந்தூழி யூழி வாழ்ந்திருக்கக் கெட்டி கெட்டி. 5. ஆடுகள் கிடாய்களை வேறாக வடுக்க ஆக்க வேதநாயகனும் பாக்கள் தொடுக்க நீடு முலகத்தை ஞாயந் தீர்த்து நிரையம் விடுக்க நீதிமான்கள் யாவருக்கும் நித்திய சீவனைக்கொடுக்க.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanthaanae Thanthaip Pithaavin Sundhara Maindhanae Andhamaayuruvang Kontu Anpudan Seeyonaikkantu Vinthaiyil Sallaabam Vintu Meentiratsith Thaala Venru 1.angkiyu Maar Parukil Porkach Saiyunggatti Atsaya Thaevath Thiraviya Aaranangkitti Thunggamaay Karatthil Vaana Raatsiya Sengkolaineettich Sothip Pirakaasa Seevaratthina Kireedam Sootti. 2. Akkinik Kozhundha Tavaay Kankalerikka Aathittha Nenavae Mugap Piravai Virikka Mikka Siratthin Romam Panjsinum Venmai Therikka Maenmai Yinek Kaalanggal Kontezhu Thoodhar Aarpparikka. 3. Kaayum Soku Saavuk Kottha Kaalkalilangga Karatthinilae Ezhu Natsatthiranggalilangga Vaayilirun Thirupuramum Koormaippattayam Thulangga Vaaruthich Salattholiyin Vaartthai Yaalandam Kulungga. 4. Veeriyatthotaemaega Patthiraasanath Thetti Meentulakai Yaanda Vaedhanaattuk Kutti Kaariyatthotae Seeyon Kumaariyaik Kalyaananggatti Kaninthu Kaninthoozhi Yoozhi Vaazhnthirukkak Ketti Ketti. 5. Aatugal Kitaaykalai Vaeraaga Vatukka Aakka Vaedhanaayakanum Paakkal Thotukka Neetu Mulakatthai Njaayan Theertthu Niraiyam Vitukka Neethimaankal Yaavarukkum Nitthiya Seevanaikkotukka.