பாடல் #39114
அருமை ரட்சகர் வருவாரோ
🔤 Arumai Ratsakar Varuvaaro
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருமை ரட்சகர் வருவாரோ எனக் கனந்த சுகம் தருவாரோ திருவுளமே பெருவளமே- தினதுதியே எனை மதியே-என் 1.இன்பமில்லா இருள்வாங்க அவர் இருகையினா லெனைத்தாங்க துன்பமெல்லாம் விட்டு நீங்க சுப சோபனமாய் நலமோங்கத் துணைபுரிந்து பிணைபரிந்து துயர் பிரிந்து என்பெயர் தெரிந்து. 2. முத்தமிட்டென்னை அணைத்தாற்ற என்முழு இருதயத்தையும் தேற்ற நித்தம் அவர் பதத்தைப் போற்ற என் நெஞ்சின் கவலையெல்லாம் மாற்ற நினை வொடுங்கி மனமடங்கி நினையுணர்ந்து எனை மணர்ந்து. 3. ஆதி வினை யெல்லாம் நீக்கி எனை ஆனந்த சந்தோடமாக்கி வேத நாயகன் கவிநோக்கி நின் மேலான நன்மைக் குள்ளாக்கி மிக யிகழ்ந்து அக மகிழ்ந்து மிகப் புகழ்ந்து சுகத்து கந்து.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arumai Ratsakar Varuvaaro Enak Kanandha Sugam Tharuvaaro Thiruvulamae Peruvalamae- Thinathuthiyae Enai Mathiyae-en 1.inbamillaa Irulvaangga Avar Irukaiyinaa Lenaitthaangga Thunbamellaam Vittu Neengga Suba Sobanamaay Nalamonggath Thunaipurinthu Pinaibarinthu Thuyar Pirinthu Enpeyar Therinthu. 2. Mutthamittennai Anaitthaartra Enmuzhu Irudhayatthaiyum Thaertra Nittham Avar Pathatthaip Portra En Nenjsin Kavalaiyellaam Maartra Ninai Votungki Manamatangki Ninaiyunarnthu Enai Manarnthu. 3. Aathi Vinai Yellaam Neekki Enai Aanandha Santhodamaakki Vaedha Naayakan Kavinokki Nin Maelaana Nanmaik Kullaakki Miga Yigazhnthu Aga Makizhnthu Migap Pugazhnthu Sugatthu Kanthu.