பாடல் #39113
பவனி பார்க்கலா மாதே சாலேம்
🔤 Pavani Paarkkalaa Maathae Saalaem
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பவனி பார்க்கலா மாதே சாலேம் பதிக்கு வாருமிப் போதே-கிறிஸ்தின் புவனம் யாவும் படைத்தவன் தந்திடும் பூரணக்கிருபைச் சோதி சிறந்திடும் கவனமாய்ச் சீயோன் மாது பணிந்திடும் காதற் கிறிஸ்தாதிப் பிரவ டீகத் துரையார் வந்திடும் 1.தீர்க்கதரிசி சகரியாத் தீட்டின திட்டப் பிரகாரமாய்த்தானே இரண்டு சித்திரக் கரத்தின் மறியின் மேலேறித் திருவுளமாக நங்கோனே பார்க்கு ளெருசலை யூர்க்குளப் போஸ்தலர் பன்னிரு பேருடன் மானே-கன பக்தியுடனோசனா வென்று கும்புகள் துத்தியஞ் சொல்ல வந்தானே ஆர்க்குங் கிடையாத ஆனந்த காட்சி ஆற்றுமப் பெண்ணுக் கினி யென்னதாட்சி மார்க்கமே மன வாஞ்சைக்கித மேயெனின் மாசற் சனி யென் றோதிய நேசக் கனியே சென்று முன். 2. அந்தமதாய் விருட்சக் கிளைகள் பிடித் தாரண கீதங்கள் நீடவே - மிக அட்சய ரோடடர்ந்த திரட் கும்புகள் வஸ்திரங்களைப் பரவிப் போடவே விந்தையாய்த் தாவீதின் மைந்தனே ரட்சியும் என்று சனங்கள் கொண்டாடவே யேசு மேசியா ஓசியனா வென்று பிள்ளைகள் ஆசையுடன் குதித் தாடவே இந்தப் பிரகாரம் புறப்பட்டு வந்தார் இரட்சிப் பனைத்தையுங் கை நீட்டித் தந்தார் சந்தோ டமாயிற்று விந்தைக் குயிலே நீ சற்றுந் தெரியா திங்கே முற்றும் பிரியாதங்கே. 3. வேடிக்கையாகவே சால மோன் கட்டின மேன்மை தேவாலயம் பாரும் அங்கு மீண்டும் கிறிஸ்து வுலாவின தாம்பிர மாண்ட மண்டபமு நேருங் கூடிப் பின் கீத ரோனாற்றுக் கப்பாற் கொல்க தாமலைச் சார் பினிற் சேரும் ஐந்து கோல மண்டபங்கள் கூடும் பெதஸ்தாக் குளத்திற் குளித் தன்பு கூரும் நீடும் வேத நாயகன் தமிழ் பாடும் நெஞ்ச முருகிக் கிறிஸ்துவைத் தேடும் பாடு மரணமும் வாதையும் சீயோனே பட்டு தவர்க் குன்றானை விட்டு துயிருந்தானே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pavani Paarkkalaa Maathae Saalaem Pathikku Vaarumip Pothae-kiristhin Puvanam Yaavum Pataitthavan Thanthitum Pooranakkirupaich Sothi Siranthitum Kavanamaaych Seeyon Maathu Paninthitum Kaadhar Kiristhaathip Pirava Teegath Thuraiyaar Vanthitum 1.theerkkatharisi Sakariyaath Theettina Thittap Pirakaaramaaytthaanae Irantu Sitthirak Karatthin Mariyin Maelaerith Thiruvulamaaga Nangkonae Paarkku Lerusalai Yoorkkulap Posthalar Panniru Paerudan Maanae-kana Pakthiyudanosanaa Venru Kumpugal Thutthiyanj Solla Vanthaanae Aarkkung Kitaiyaadha Aanandha Kaatsi Aarrumap Pennuk Kini Yennathaatsi Maarkkamae Mana Vaanjsaikkidha Maeyenin Maasar Sani Yen Rothiya Naesak Kaniyae Senru Mun. 2. Andhamathaay Virutsak Kilaigal Pitith Thaarana Keedhanggal Needavae - Miga Atsaya Rodatarndha Thirat Kumpugal Vasthiranggalaip Paravip Podavae Vinthaiyaayth Thaaveethin Maindhanae Ratsiyum Enru Sananggal Kontaadavae Yaesu Maesiyaa Osiyanaa Venru Pillaigal Aasaiyudan Kuthith Thaadavae Indhap Pirakaaram Purappattu Vanthaar Iratsip Panaitthaiyung Kai Neettith Thanthaar Santho Tamaayirru Vinthaik Kuyilae Nee Sarrun Theriyaa Thingkae Murrum Piriyaadhangkae. 3. Vaetikkaiyaagavae Saala Mon Kattina Maenmai Thaevaalayam Paarum Angku Meentum Kiristhu Vulaavina Thaampira Maanda Mandapamu Naerung Kootip Pin Keedha Ronaarruk Kappaar Kolka Thaamalaich Saar Pinir Saerum Ainthu Kola Mandapanggal Kootum Pedhasthaak Kulatthir Kulith Thanpu Koorum Neetum Vaedha Naayakan Thamizh Paatum Nenjja Murukik Kiristhuvaith Thaetum Paatu Maranamum Vaathaiyum Seeyonae Pattu Thavark Kunraanai Vittu Thuyirunthaanae.