பாடல் #39110
இராஜனாம் பரம ராசன்
🔤 Iraajanaam Parama Raasan
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜனாம் பரம ராசன் தவிது மகா இராஜன் பதிக்கு வந்தானே வாசகத்தின்படி யுலாசமாக நீச வாகன மேற் கொண்டு சிநேகச் சீயோனுக் கென்று. 1.அண்டர்கள் சேனையும் மிண்டர்கள் தானையு மண்டிய புத்திரருந் தொண்டர் சமுத்திரமும் பெண்டுகள் முழக்கமு மெண்டிசையு மதிரக் கண்டகர் மனங்க லங்க ஆதி செய் பண்டு வினையு மலங்கக் கொண்டு வந்து சாஸ்திரிகள் காணிக்கை கொடுக்கக் கோவர்த்தனர்கள் கும்புகூடி வந்தடுக்கத் தெண்டனென்று பனிரெண்டு சீடருரை விண்டு வேதமோத சத்திய போத சற்பிரசாத இயேசு நாத 2. பெத்தலகேஞ்சிறந்து சித்துருவாய்ப் பிறந்து முத்தி வழியைக் காட்டி சுத்தக் கிருபைப் பாராட்டி மெத்தமகிமை நீட நித்தியானந்த சந்தோட வெற்றிப் பிரவடீகராகச் சமஸ்தமூ முற்றுமுடித்துச் சிநேக சத்திய பராபரனின் உத்தமம் விளங்கத் தவிதின் குமாரனெனச் சகலரும் வணங்க கர்த்தருடைய நாமத்தில் வருகிற கிறிஸ்துவென்று வாழ்த்தப் புகழ் சாற்ற எமைத் தேற்றக் கரையேற்ற 3. கன்னியர் சீயோனே நின்னுரிமைக் கோனே பொன் மரிமீதேறி உன்னையன்பாய்க் கோறி துன்னி வருகுதெனச் சொன்ன நெறிப் பிரகாரம் முன்னும் பின்னும் போறவார கும்புகளுன் நன்னெறிச் சீடருஞ் சேர வன்னப் பட்டாடைகள் வழி எங்கும் விரிக்க மரத்தின் கிளைகளைத் தறித்தெங்குந் தெளிக்க உன்னதத்தி லோசியன்னா தவிதிசரேல் மன்னாவென்று பாடப் பிள்ளைகள் கூடப் புகழ்நீடக் கொண்டாட 4. ஆதி வினைகளற யூதர் பதிகள் பெறச் சாதியெலா மீடேற நீதிகள் நிறைவேற தீதலகை களோட மாதவங்கள் கைகூட தாதையர்க்குச் சங்கீர்த்தனமு மகிமையும் ஓது செபமுந் தோத்திரமும் போதவனாதி யிலிப்போதும் எப்போதுமாக புகழ்ச்சி மகிழ்ச்சியு முண்டாகிப் பிரஸ்தாபமாக நூதனக் கவிசொல் வேத நாயகனும் பாதத்தணுகி வாழ்கத் திருவுளமாகத் திரியேகச் சுவா பீக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajanaam Parama Raasan Thavithu Makaa Iraajan Pathikku Vanthaanae Vaasakatthinbati Yulaasamaaga Neesa Vaagana Maer Kontu Sinaegach Seeyonuk Kenru. 1.andarkal Saenaiyum Mindarkal Thaanaiyu Mantiya Putthirarun Thondar Samutthiramum Pentugal Muzhakkamu Mentisaiyu Mathirak Kandakar Manangga Langga Aathi Sey Pantu Vinaiyu Malanggak Kontu Vanthu Saasthirigal Kaanikkai Kotukkak Kovartthanarkal Kumpukooti Vandhatukkath Thendanenru Panirentu Seedarurai Vintu Vaedhamodha Satthiya Podha Sarpirasaadha Yesu Naadha 2. Petthalakaenjsiranthu Sitthuruvaayp Piranthu Mutthi Vazhiyaik Kaatti Sutthak Kirupaip Paaraatti Metthamakimai Needa Nitthiyaanandha Santhoda Verrip Piravateegaraagach Samasthamoo Murrumutitthuch Sinaega Satthiya Paraabaranin Utthamam Vilanggath Thavithin Kumaaranenach Sakalarum Vanangga Karttharutaiya Naamatthil Varukira Kiristhuvenru Vaazhtthap Pugazh Saartra Emaith Thaertrak Karaiyaertra 3. Kanniyar Seeyonae Ninnurimaik Konae Pon Marimeethaeri Unnaiyanpaayk Kori Thunni Varukuthenach Sonna Nerip Pirakaaram Munnum Pinnum Poravaara Kumpugalun Nannerich Seedarunj Saera Vannap Pattaataigal Vazhi Engkum Virikka Maratthin Kilaigalaith Tharitthengkun Thelikka Unnathatthi Losiyannaa Thavithisarael Mannaavenru Paadap Pillaigal Koodap Pugazhneedak Kontaada 4. Aathi Vinaigalara Yoodhar Pathigal Perach Saathiyelaa Meetaera Neethigal Niraivaera Theedhalakai Kaloda Maadhavanggal Kaikooda Thaathaiyarkkuch Sangkeertthanamu Makimaiyum Othu Sebamun Thotthiramum Podhavanaathi Yilippothum Eppothumaaga Pugazhchsi Makizhchsiyu Muntaakip Pirasthaabamaaga Noodhanak Kavisol Vaedha Naayakanum Paadhatthanuki Vaazhkath Thiruvulamaagath Thiriyaegach Suvaa Peega