பாடல் #39107
மங்கள மங்கள
🔤 Manggala Manggala
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மங்கள மங்கள - நமோ நமோ மங்கள மங்களஞ் - செயா செயா மங்கள மங்களஞ் - சதானந்தா மங்கள மங்களம். 1. திங்கள் மேவு வானங்களோடுல கங்கள் மேவு சீவன்களையுந் துங்கமா தயை யிலங்கவே செய்து கனங்களே மிக விளங்கு தெய்வீகா. 2. ஆதி யேவையா டேதமாற நேர் நீதி யோதிய தாதை சத்திய வேத போதக நாத தீதவி வேக ஏக திரித்துவ தேவாதி தேவா. 3. சீருலா வுபகார சிருஷ்டித பாரா தீத சங்காரா நன்மை யேருலா வுபதார ஆதி தற் காரா தயை விழி பாராய் கிருபை கூராய். 4. ஆதி யந்தமிலா தனந்ததே வாதி மைந்தனே தாதா தயை நீத பந்தனம் பூதலந்தனி லோத வந்த யேசுநாதா பிரசாதா. 5. பூமி யந்தர வான மெண்டிசை யோர் வணங்கு தேவாதியடர் நேமியுங் கன பூத மஞ்சவி சேடம் விண்ட யேசுநாதா பொற்பாதா. 6. ஆய்ந்த வன்பர் கடேர்ந்த புந்தியி னேர்ந்து கூர்ந்த வானந்தா வருட் சேர்ந்த செஞ்சுடர்க் காந்தி தற்சுயம் பானிஸ் பிரித்துச் சாந்தரூப சருவேசா. 7. தேசுலாவிய மேசியா கிறிஸ் தேசு நாயகர் மீது கன நேச மெய் விசுவாச நெல்லையின் வேத நாயகன் பாவ விமோசனா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manggala Manggala - Namo Namo Manggala Manggalanj - Seyaa Seyaa Manggala Manggalanj - Sathaananthaa Manggala Manggalam. 1. Thinggal Maevu Vaananggalotula Kanggal Maevu Seevankalaiyun Thunggamaa Thayai Yilanggavae Seythu Kananggalae Miga Vilangku Theyveekaa. 2. Aathi Yaevaiyaa Taedhamaara Naer Neethi Yothiya Thaathai Satthiya Vaedha Podhaka Naadha Theedhavi Vaega Aega Thiritthuva Thaevaathi Thaevaa. 3. Seerulaa Vubakaara Sirushtidha Paaraa Theedha Sangkaaraa Nanmai Yaerulaa Vubathaara Aathi Thar Kaaraa Thayai Vizhi Paaraay Kirupai Kooraay. 4. Aathi Yandhamilaa Thanandhathae Vaathi Maindhanae Thaathaa Thayai Needha Pandhanam Poodhalandhani Lodha Vandha Yaesunaathaa Pirasaathaa. 5. Poomi Yandhara Vaana Mentisai Yor Vanangku Thaevaathiyatar Naemiyung Kana Poodha Manjjavi Saedam Vinda Yaesunaathaa Porpaathaa. 6. Aayndha Vanbar Kataerndha Punthiyi Naernthu Koorndha Vaananthaa Varut Saerndha Senjsudark Kaanthi Tharsuyam Paanis Piritthuch Saandharooba Saruvaesaa. 7. Thaesulaaviya Maesiyaa Kiris Thaesu Naayakar Meethu Kana Naesa Mey Visuvaasa Nellaiyin Vaedha Naayakan Paava Vimosanaa.