பாடல் #39106
ஆதம் வினை தீரப்புது
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
1. ஆதம் வினை தீரப்புது ஆதம் என வந்துதித்த ஆதவா திவ்ய மாதவா 2. ஆத்தும சரீர வாதை சாற்றுதற் கதீத மேதை அறைகுவேன் பாவச் சிறை புகேன் 3. வாரடியோ முண் முடியோ தீரவே சகித்தனையோ மனுவேலா எனக்கனு கூலா 4. நீதிமான் என்றே உரைத்து நீதி தப்பியே பிலாத்து நீக்கினான் குருசில் போக்கினான் 5. பாடுறக் குறுசிலுனைப் பாதகரறைந்தும் பினை பாசமாய் மன்னிப்பே சொனாய் 6. வலது கள்ளன் கூவு செபம் நல தெனப் பரம பதம் வாழ்த்தினை உரை சாற்றினை 7. அப்பனே உன் கையிலாவி செப்பி தந்தேன் என்று கூவி என் அத்தனே நீ மரித்தனை 8. உன்னதன் மரித்திருக்க என்னவிதம் நானிருக்க உரை ஐயா தவிது துரை மெயா 9. மட்டிலாப் பவங்கள் மிஞ்சி துட்ட வஞ்சன் நெஞ்சனஞ்சி வாடினேன் உனை நாடினேன் 10. உன்னை அன்றி ஆதரவு பின்னை யுண்டோ ஆதரவு ஒழி நலா சீவவழி அலா 11. தங்கு சிலுவைப் பிரதாபா சங்கை இங்கித சொல் தீபா சரணமே அதிதரணமே 12. நித்திய சீவாதிபதி சத்தியத் தவத் தோர்மதி நேசனே சருவேசனே 13. வந்தனம் அனந்த னந்தம் சந்ததம் புகழ் பிரபந்தம் வரிசையாய்ச் சொல் அருள் செய்வாய் 14. நித்தம் வைத்துக் காதலையா பத்தன் எலியா சொலையா நீளுமே எந்நாளுமே.