பாடல் #39105
என் பிரிய நாயகனை
🔤 En Piriya Naayakanai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பிரிய நாயகனை இயேசு நசராதிபனை அன்பு மிகு பூரணனை அரியர் கொல யோசனை 1.முன்பு செய்த யூதாவினை முத்தியிடச் செய்தையனை துன்புறப் பிடித்தேபினை துட்டர் சென்றார் காய்பாமனை 2. கண்ணதைக் கண்டாலழாதோ காதிற் கடுஞ் சொல் விழாதோ எண்ண மனைத்தும் போகாதோ இதைய முடைந் திடாதோ 3. ஞாயம் விசாரிக்கு முன்னே நாதனைச் சினந்து கொன்னே திய னறைந்தான பின்னே சிந்தனை யுறாத தென்னே 4. மூப்பர் வேத பாரகரும் முக்கிய சங்கத்தார் பலரும் காய்புறு சேட்டாரியரும் கன் றுதல் கொண்டார் எவரும் 5. சேவகரும் சேர்ந்து கூடி சேனை வித வசைகள் பாடி கோவை கொல்ல வகைகள் தேடி குற்றம் சாட்டினார்கள் சாடி 6. கேள்வி பல கேட்டிடித்து கிறிஸ்துவின் கன்னத் தடித்து நாள் விடியும் வரை நடித்து நகை செய்தனர் துடித்து 7. குட்டி இரா முழுதும் வைது கோரணிகள் பலதும் செய்து திட்டி வெகு வினைய மெய்து சீரினர் நிந்தனை களுய்து 8. தேவ சுதன் எனப் பரனார் செப்பு மொழி கேட்ட வொன்னார் தேவ தூஷணஞ் செப்பினார் தேறு மெனவே சாற்றினார் 9. பாவிகள் பரன் சுதனை பழி சுமத்தி மன்னனை மேவி அதிகாரமனை விரைந்தாரான் மாவே நினை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Piriya Naayakanai Yesu Nasaraathibanai Anpu Miku Poorananai Ariyar Kola Yosanai 1.munpu Seytha Yoothaavinai Mutthiyidach Seythaiyanai Thunpurap Pititthaepinai Thuttar Senraar Kaaypaamanai 2. Kannathaik Kantaalazhaatho Kaathir Katunj Sol Vizhaatho Enna Manaitthum Pokaatho Ithaiya Mutain Thitaatho 3. Njaayam Visaarikku Munnae Naadhanaich Sinanthu Konnae Thiya Narainthaana Pinnae Sindhanai Yuraadha Thennae 4. Mooppar Vaedha Paarakarum Mukkiya Sanggatthaar Palarum Kaaypuru Saettaariyarum Kan Rudhal Kontaar Evarum 5. Saevakarum Saernthu Kooti Saenai Vidha Vasaigal Paati Kovai Kolla Vakaigal Thaeti Kurtram Saattinaarkal Saati 6. Kaelvi Pala Kaettititthu Kiristhuvin Kannath Thatitthu Naal Vitiyum Varai Natitthu Nakai Seythanar Thutitthu 7. Kutti Iraa Muzhuthum Vaithu Koranigal Palathum Seythu Thitti Veku Vinaiya Meythu Seerinar Nindhanai Kaluythu 8. Thaeva Sudhan Enap Paranaar Seppu Mozhi Kaetta Vonnaar Thaeva Thooshananj Seppinaar Thaeru Menavae Saarrinaar 9. Paavigal Paran Sudhanai Pazhi Sumatthi Mannanai Maevi Athikaaramanai Virainthaaraan Maavae Ninai.