பாடல் #39104
ஆதி பாம்பு அணுகியே உம்மை
🔤 Aathi Paampu Anukiyae Ummai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதி பாம்பு அணுகியே உம்மை அணுகியே உம்மை கடித்த தையோ பாதகி எனைக் காக்க வந்த பர்த்தா உன் பாதங் கொத்தி வருத்த 1.ஐயோ என தாசைக் கியந்த அருமை நாயகன்கு ருதியே சிந்த மெய்யாகவே பரர்த்து நானிந்த மேதினியிலுய் வேனோ ஆ இந்தோ 2. ஏதெனின் பூங்காவிலே சென்று ஏவையை விழச் செய்ததே அன்று ஏதோ வினை செய்யலாம் என்று எண்ணியே உம்மைக் கடித்த தன்று. 3. வேதனை மிகவே பாடடைந்து மேனி எங்கனும் நொந்து சடைந்து வாதைப்பட மனமே உடைந்து மரு கிப்புலம்பு கின்றேன் மடிந்து. 4. கூளிப் பாம்பே இஸ்திரி வித்து குதிகாலை நீ கொத்திக் கடித்து மாளவே வதைப்பாய் என்றுரைத்து வைத்த வார்த்தை உண்மையாய்ப் பாவித்து 5. என்ன செய்குவேன் ஏசுபாதமே இப்பாடுற்றது தானே போதுமே மன்னவன் மரிக்க இப்போதுமே வாழ்ந்து நானிருந்தால் நீதமே. 6. பாவி நான் செய்பாவம் உம்மை பற்றிப் பாம்பு தீண்டிற்றே தம்மை தேவனுயிர்ப் பித்திங்கே நம்மை திரும்பச் சுபமாய் வாழ்வித்தல் செம்மை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathi Paampu Anukiyae Ummai Anukiyae Ummai Katittha Thaiyo Paadhaki Enaik Kaakka Vandha Partthaa Un Paadhang Kotthi Varuttha 1.aiyo Ena Thaasaik Kiyandha Arumai Naayakanku Ruthiyae Sindha Meyyaagavae Parartthu Naanindha Maethiniyiluy Vaeno Aa Intho 2. Aethenin Poongkaavilae Senru Aevaiyai Vizhach Seythathae Anru Aetho Vinai Seyyalaam Enru Enniyae Ummaik Katittha Thanru. 3. Vaedhanai Migavae Paadatainthu Maeni Engganum Nonthu Satainthu Vaathaippata Manamae Utainthu Maru Kippulampu Kinraen Matinthu. 4. Koolip Paampae Isthiri Vitthu Kuthikaalai Nee Kotthik Katitthu Maalavae Vathaippaay Enruraitthu Vaittha Vaartthai Unmaiyaayp Paavitthu 5. Enna Seykuvaen Aesupaadhamae Ippaaturtrathu Thaanae Pothumae Mannavan Marikka Ippothumae Vaazhnthu Naanirunthaal Needhamae. 6. Paavi Naan Seypaavam Ummai Parrip Paampu Theentirrae Thammai Devanuyirp Pitthingkae Nammai Thirumbach Subamaay Vaazhvitthal Semmai.