பாடல் #39100
ஏதனாதி தேவனே சிலுவை
🔤 Aedhanaathi Devanae Siluvai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏதனாதி தேவனே சிலுவை சுமந் தெங்கே போறீர் என் சீவனே ஆதி பிதாவின் மைந்தா அருமைக் கிறிஸ்தானந்தா அஞ்சாத தமேவை யருந்திய நஞ்சார் கனியாலே விளைந்ததோ. 1.முந்துமனுடர் தம்மால் வந்த வினையை மாற்றி முழுது முலகை யாற்றி யெழுதும் வேதத்தைச் சாற்றி தந்த லகையைத் தாழ்த்தி மைந் தரைக் கரை யேற்றி தப்பா துயிர் விடுத்து மெய்ப் பாயிரட் சிக்கத் தோற்றி. 2. ஆக மெல்லாம் புண்ணாக அடிப் பட்டிரங்கி நோக ஆத்தும வாதைகள் மேவி வேற்றுமு கங் குராவி சாகத் தீர்க்கப்பட் டெரு சாலேம் பட்டணம் விட்டு தருகித் தருகி நின்று மருகி மருகிச் சென்று. 3. மெத்த நின் முகம் வாடி இரத்த வெள்ளங்க ளோடி மெலிந்து முண் முடிசூடி நலிந்து நடை தள்ளாடி சத்துருக்களை நாடிச் சித்த முருகித் தேடிச் சாவைத் தொடர்ந்து கொல்க தாவுக் கடர்ந்து கூடி. 4. பாவியைக் கை தூக்கவோ தீவினையை நீக்கவோ பரமகதி சேர்க்கவோ பரனோடுற வாக்கவோ மேவித்தற் காக்கவோ-சாவின் துயர் போக்கவோ வெற்பனைக் கடாட்சித்தாப் போல் எப்போதும் எனைக் கண்ணோக்கவோ. 5. சங்கையின் ராசாவே எங்கள் கிருபைப் பிதாவே சருவ தேவாதி தேவே பொறுமை யொரே யோவாவே சிங்காரப் பூங்காவே திரு நெல்லையானின் பாவே ஜீவனின் மெய் மன்னாவே சாவ தேனீர் மேசையாவை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aedhanaathi Devanae Siluvai Suman Thengkae Poreer En Seevanae Aathi Pithaavin Mainthaa Arumaik Kiristhaananthaa Anjsaadha Thamaevai Yarunthiya Nanjsaar Kaniyaalae Vilaindhatho. 1.munthumanudar Thammaal Vandha Vinaiyai Maarri Muzhuthu Mulakai Yaarri Yezhuthum Vaedhatthaich Saarri Thandha Lakaiyaith Thaazhtthi Main Tharaik Karai Yaerri Thappaa Thuyir Vitutthu Meyp Paayirat Sikkath Thorri. 2. Aaga Mellaam Punnaaga Atip Pattirangki Noga Aatthuma Vaathaigal Maevi Vaerrumu Kang Kuraavi Saagath Theerkkappat Teru Saalaem Pattanam Vittu Tharukith Tharuki Ninru Maruki Marukich Senru. 3. Mettha Nin Mugam Vaati Rattha Vellangga Loti Melinthu Mun Mutisooti Nalinthu Natai Thallaati Satthurukkalai Naatich Sittha Murukith Thaetich Saavaith Thodarnthu Kolka Thaavuk Katarnthu Kooti. 4. Paaviyaik Kai Thookkavo Theevinaiyai Neekkavo Paramakathi Saerkkavo Paranotura Vaakkavo Maevitthar Kaakkavo-saavin Thuyar Pokkavo Verpanaik Kataatsitthaap Pol Eppothum Enaik Kannokkavo. 5. Sangkaiyin Raasaavae Enggal Kirupaip Pithaavae Saruva Thaevaathi Thaevae Porumai Yorae Yovaavae Singkaarap Poongkaavae Thiru Nellaiyaanin Paavae Jeevanin Mey Mannaavae Saava Thaeneer Maesaiyaavai.