பாடல் #39097
ஆத்துமாவே உன்னரசன் துயரடைந்த
🔤 Aatthumaavae Unnarasan Thuyarataindha
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்துமாவே உன்னரசன் துயரடைந்த கனபாடே தேற்ற மாகவே சொல்லாய் இது சீயோன் மகளோடே தோற்றமாய்க் கொடும் யூதர் பகை தொடுத்தே உயிர் முடித்தார்-என் 1.பூங்காவினில் விழுந்தோர் பவம் பொறுக்க வனத் தெழுந்தார் தீங்காற் செபம் புரிந்தார் திருச் செங்குருதிகள் சொரிந்தார் பரன் தாங்காத் துயர் பூண்டார் இத்தயவா யுனை மீண்டார்-என். 2. யூதாசு வந்தடுத்தான் முத்தி உகந்தே ஒப்புக் கொடுத்தான் தீ தாய் பரர் வளைந்தார் கொடும் தீமையாவையும் விளைந்தார் மிக்கக் கோதாய்க் கரங் கட்டினார் தலைக் குருவின் வீடதிற் கிட்டினார்-இதோ. 3. அன்னாவுமே பொரிந்தான் காய் பாவு மிக வெரிந்தான் பின்னோர் களும் ஏசினார் பெரும் பெயர் தூஷணம் பேசினார் மிகை சொன்னார் படு சூட்சிகள் அவ சுத்தமான பொய்ச் சாட்சிகள்-இதோ. 4. துட்டனோ பகை நிறைந்தான் பரஞ் சோதியின் முகத் தறைந்தான் கெட்டியாய்க் கண்ணைக் கட்டினார் பல கெட்ட பாவிகள் குட்டினார்-அர்ச் சிட்ட னோர் தனும் மறுத்தான் எசு தேவ சேயனும் பொறுத் தான் - பார். 5. கொந்தளித் ததி காலமே யூதர் கும் பெலாங்கன ஓலமாய்ப் பொந்தியுப் பிலாத் திடத்தே மனம் பொங்கியே ஒப்புக் கொடுத்தார் ஒரு விந்தையாய் நடுக் கேட்டான் மிக வேதனை செய்து போட்டான் - பார். 6. கற்றூ ணோடு சேர்த்தான் வார்க் கசை யாலடித் தார்த்தான் வெற்றி யாமென எண்ணினான் குருதி வெள்ள மோடிடப் பண்ணினான் பார் பற்றி முண்முடி சூட்டினார் பரிகாச வேந் தென நாட்டினார்-ஒகோ. 7. மூங்கிற் கோல் கையிற் கொடுத்தார் கொடும் மூர்க்க மாயறை விடுத்தார் சாங்கமாய்ப் புகழ் வாழ்த்தினார் சகலாத்துச் சட்டையைப் போர்த்தினார் கிறிஸ்தோங்கலின் முகந்துப்பினார் ஒரு காலை தூஷணஞ் செப்பினார்-ஓகோ. 8. ஏரோதும் பரிகாசித்தான் பித்தன் எனவே சொல்லி ஏசித்தான் விருது வெண்ணுடை யிட்டான் கும்பில் மீளவும் வர விட்டான்-துரை பரபாவையே விடுத்தான் கொல்லப் பாத்திபன் றனைக் கொடுத்தான். 9. குருசை புயத் தெடுத்தார் கொலைக் கொல்கொதா மலைக் கடுத்தார் எருசலை நகர் கடந்தார் நெடும் தெரு வீதியைத் தொடர்ந்தார்-அங்கே உருகி அழப் பெண்கள் கண்ணீ ரோடினதிருக் கண்கள்-ஐயோ. 10. வலிதாயுடை களைந்தார் சேவகர் தான் சுற்றி வளைந்தார் சிலுவைதனில் ஏற்றினார்-கொடும் தேவதூஷணஞ் சாற்றினார் மூவுலகாவையும் ஆண்டான் அங்கு பெலியாகியே மாண்டான் - பார். 11. சோதியுமுயிர் கொடுத்தான் பெருஞ் சூரியன் ஒளி விடுத்தான் நீதியாவையுங் கண்டான் இரு நீதராலடக் குண்டான் நெல்லை வேத நாயக னாடி னான் இது சேதியாவையும் பாடினான் - பார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthumaavae Unnarasan Thuyarataindha Kanapaatae Thaertra Maagavae Sollaay Ithu Seeyon Makalotae Thortramaayk Kotum Yoodhar Pakai Thotutthae Uyir Mutitthaar-en 1.poongkaavinil Vizhunthor Pavam Porukka Vanath Thezhunthaar Theengkaar Sebam Purinthaar Thiruch Sengkuruthigal Sorinthaar Paran Thaangkaath Thuyar Poontaar Itthayavaa Yunai Meentaar-en. 2. Yoothaasu Vandhatutthaan Mutthi Uganthae Oppuk Kotutthaan Thee Thaay Parar Valainthaar Kotum Theemaiyaavaiyum Vilainthaar Mikkak Kothaayk Karang Kattinaar Thalaik Kuruvin Veedathir Kittinaar-itho. 3. Annaavumae Porinthaan Kaay Paavu Miga Verinthaan Pinnor Kalum Aesinaar Perum Peyar Thooshanam Paesinaar Mikai Sonnaar Patu Sootsigal Ava Sutthamaana Poych Saatsigal-itho. 4. Thuttano Pakai Nirainthaan Paranj Sothiyin Mugath Tharainthaan Kettiyaayk Kannaik Kattinaar Pala Ketta Paavigal Kuttinaar-arch Sitta Nor Thanum Marutthaan Esu Thaeva Saeyanum Poruth Thaan - Paar. 5. Kondhalith Thathi Kaalamae Yoodhar Kum Pelaanggana Olamaayp Ponthiyup Pilaath Thidatthae Manam Pongkiyae Oppuk Kotutthaar Oru Vinthaiyaay Natuk Kaettaan Miga Vaedhanai Seythu Pottaan - Paar. 6. Karroo Notu Saertthaan Vaark Kasai Yaalatith Thaartthaan Verri Yaamena Enninaan Kuruthi Vella Motidap Panninaan Paar Parri Munmuti Soottinaar Parikaasa Vaen Thena Naattinaar-oko. 7. Moongkir Kol Kaiyir Kotutthaar Kotum Moorkka Maayarai Vitutthaar Saanggamaayp Pugazh Vaazhtthinaar Sakalaatthuch Sattaiyaip Portthinaar Kiristhonggalin Muganthuppinaar Oru Kaalai Thooshananj Seppinaar-oko. 8. Aerothum Parikaasitthaan Pitthan Enavae Solli Aesitthaan Viruthu Vennutai Yittaan Kumpil Meelavum Vara Vittaan-thurai Parapaavaiyae Vitutthaan Kollap Paatthiban Ranaik Kotutthaan. 9. Kurusai Puyath Thetutthaar Kolaik Kolkothaa Malaik Katutthaar Erusalai Nakar Katanthaar Netum Theru Veethiyaith Thodarnthaar-angkae Uruki Azhap Penkal Kannee Rotinathiruk Kankal-aiyo. 10. Valithaayutai Kalainthaar Saevakar Thaan Surri Valainthaar Siluvaidhanil Aerrinaar-kotum Thaevathooshananj Saarrinaar Moovulakaavaiyum Aantaan Angku Peliyaakiyae Maantaan - Paar. 11. Sothiyumuyir Kotutthaan Perunj Sooriyan Oli Vitutthaan Neethiyaavaiyung Kantaan Iru Needharaalatak Kuntaan Nellai Vaedha Naayaka Naati Naan Ithu Saethiyaavaiyum Paatinaan - Paar.