பாடல் #39094
தந்தையே தருணங்காவே
🔤 Thanthaiyae Tharunangkaavae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தையே தருணங்காவே சந்ததம் வந்தன மெய்த்தேவே 1. சுந்தரக் கிருபாசன்னா தூய ஞானா சூரியசம் பன்னா 2. நெருக்கப் பட்டுப் பரதபிப்போரே நேரிட்டு நம்மை நோக்கு மென்றீரே 3. எங்கணுஞ் சிதறிப் போனோம் ஏழையும் நிர்ப்பந்தருமானோம் 4. ஆதரிப்பா ராருமில்லை அம்பரா கிருபையாக முன்னில்லே. 5. கெட்ட மக்கள் நாங்கள் தானே கிருபை கூருமையா தம்பிரானே. 6. பாவத்தாலே முற்றிலுங் கெட்டோம் பாதமே கதிகை விடப் புட்டோம். 7. சத்தியப் பரம பிதாவே தாமதியாதே யுமையாவே. 8. சாதிகனிலைமைக் கெடாமல்த் தாங்கி யாதரிப்பாய் கைவிடாமல். 9. யேசுவின் முகத்தைப் பாரும் இக்கட்டாபத் தெல்லாத்தையுந் தீரும். 10. வேதநாயகன் சொன்ன பாட்டு மெய்ப்பரா அடியார்கள் மன்றாட்டு.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthaiyae Tharunangkaavae Sandhatham Vandhana Meytthaevae 1. Sundharak Kirupaasannaa Thooya Njaanaa Sooriyasam Pannaa 2. Nerukkap Pattup Parathapipporae Naerittu Nammai Nokku Menreerae 3. Engganunj Sidharip Ponom Aezhaiyum Nirppandharumaanom 4. Aadharippaa Raarumillai Ambaraa Kirupaiyaaga Munnillae. 5. Ketta Makkal Naanggal Thaanae Kirupai Koorumaiyaa Thampiraanae. 6. Paavatthaalae Murrilung Kettom Paadhamae Kathikai Vidap Puttom. 7. Satthiyap Parama Pithaavae Thaamathiyaathae Yumaiyaavae. 8. Saathiganilaimaik Ketaamalth Thaangki Yaadharippaay Kaivitaamal. 9. Yaesuvin Mugatthaip Paarum Ikkattaabath Thellaatthaiyun Theerum. 10. Vaedhanaayakan Sonna Paattu Meypparaa Atiyaarkal Manraattu.