பாடல் #39093
சிவ தவ சுப நவ தெய்வ
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
சிவ தவ சுப நவ தெய்வ அதி செய சொரூபியே அருள்புரி திரி முதலொரு பொருளது குண திவிய ரூபியே. உவமையற்ற மெஞ்ஞான சத்திய உன்னதத் தேவா தயாபர ஒப்பில்லா உண்மைப் பராபர ஓரே யேயோவா 1. ஓம் பகவா ஓம் நமா அல்பா, ஓமேகாவே ஓகோ உம்பரா கருணாம்பரா ஓலம் பதந்தாவே ஆம்பிரமா ஓம் நமா அனாதிமூலமே ஓலோலம் அல்லேலூயா மகத்துவ மனந்த காலமே 2. அதிசவுரிய பெலமகிமை யனாதி யன்பையா ஓர் ஐயனே பரமையனே யருள் செய்யுமின்பையா துதிமிகு மதிபதி சயபதி சுரநரபதியே ஐயாவே சுத்தனே சதா நித்தனே கரிசித்த வானதியே 3. வேத மந்திரதீத விந்தை கண் மிகுந்த சிங்காரா வுதாரா மித்திர பேத கனத்த மேவிய சத்துரு சங்காரா ஆதியந்த மிலாத சுந்தர ஆமனாமனா ஓகோகோ அனந்தனந்த சங்கீர்த்தனந் துதியாளு மோசன்னா.