பாடல் #39092
சீவப் பரப் பிரமயே
🔤 Seevap Parap Piramayae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீவப் பரப் பிரமயே யோவா திவிய திரியேக அதிசய தேவாரே குருபர மூவாளொரேய ரூபி முக்கிய கிருபைச் சொரூபி. 1. சருவேசுரா சருவக் கியானி கிருபாகரா அரிய மெஞ்ஞானி திரிலோக மாளும் பிரதானி பெறைத் தற்பரா மெஞ்ஞான தாதா நீகுருபர. 2. கருணாகரா கதிதரும் கத்தா பரிபூரணா அதி பரிசுத்தா பரமேசுரா மெஞ்ஞான பத்தா சரண் டந்தாள் சதானந்தா எந்தாய் நீ குருபர. 3. அதிபதியே அற்புத நாதா அதிசயமே சத்திய வேதா பரகதி யாள் நித்திய போதா துதி தூதாக்கள் பாடிய சுந்தரா குருபர. 4. அருளம்பரா வானவர்கோவே ஒரு தம்பிரானான மெய்தேவே யுருவம் படாகித்திய பிதாவே சரண் நம்பினோம் வேதாந்த நாதா நீ குருபர. 5. ஓம் அல்லா அல்பா ஓமேகா மாவல்லா மகத்துவ தெய்வீகா ஆ அல்லேலூயா திரியேகா ஆ மன்னா சிநேகா முன்னா நீ கா கா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seevap Parap Piramayae Yovaa Thiviya Thiriyaega Athisaya Thaevaarae Kurubara Moovaaloraeya Roopi Mukkiya Kirupaich Soroopi. 1. Saruvaesuraa Saruvak Kiyaani Kirupaagaraa Ariya Menjnjaani Thiriloga Maalum Pirathaani Peraith Tharparaa Menjnjaana Thaathaa Neekurubara. 2. Karunaagaraa Kathidharum Katthaa Paripooranaa Athi Parisutthaa Paramaesuraa Menjnjaana Patthaa Saran Tanthaal Sathaananthaa Enthaay Nee Kurubara. 3. Athibathiyae Arpudha Naathaa Athisayamae Satthiya Vaethaa Parakathi Yaal Nitthiya Pothaa Thuthi Thoothaakkal Paatiya Sundharaa Kurubara. 4. Arulambaraa Vaanavarkovae Oru Thampiraanaana Meythaevae Yuruvam Pataakitthiya Pithaavae Saran Nampinom Vaethaandha Naathaa Nee Kurubara. 5. Om Allaa Alpaa Omaekaa Maavallaa Makatthuva Theyveekaa Aa Allaelooyaa Thiriyaekaa Aa Mannaa Sinaekaa Munnaa Nee Kaa Kaa