பாடல் #39091
கிருபைப் பரா கிருபைப் பரா
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
கிருபைப் பரா கிருபைப் பரா கிருபைப் பரமேசுரா கீர்த்தனம் சங்கீர்த்தன மிஸ் தோத்திரம் சருவேசுரா 1. அருமைப் பிதாச் சுதனரூபி அட்சயத்திரியேகமே அனந்த சதானந்தரு ளானந்தப் பிரவாகமே. 2. அதிக சவுரிய வல்லமை மகிமைப் பிரதாபியே அதிசய வினோத கிருபாசனத் தோர் ரூபியே. 3. பரம தயாபர கருணாம்பர உனத நேசமே பகர முடியாத பரிபூரண விலாசமே 4. உணரவரி தானவுயர்வான அபிதானமே யுருவமிலா துவமை யிலா தொளிர் பரம ஞானமே 5. பரிசுத்தம் நீதிக்கண் முக்கிய பாக்கிய சத்ய தேவனே பரிவுற்ற பூரண பக்கிஷாபதி நித்திய ஜீவனே 6. அருள் செய்பரா அருள் செய்பரா அனந்த சதாகாலமே அம்பராவே காம்பரா கருணாம்பரா ஓலோலமே.