பாடல் #39090
ஆதியோம் பாதா நமோ நமோ
🔤 Aathiyom Paathaa Namo Namo
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியோம் பாதா நமோ நமோ அல்பா ஓம்பரப் பிரம நமோ நமோ. மாதிர பராபர வஸ்துவே நிராதர ஆதர கருணாகர நமோ நமோ. 1. சருவேசுரனே நமோநமோகுரு சச்சி தானந்தா நமோ நமோ மறைதரு பூசுர மாதவ பரேசுர முறையினம் யேசுர நமோ நமோ. 2. தேவ குமாரா நமோ நமோ நர திரு அவதாரா நமோ நமோ மூவரிலொருவா மோக்கிடத் தருவா சீவ சொரூபா நமோ நமோ. 3. சுத்த வானிதியே நமோ நமோ அதி தூய சன்னதியோ நமோ நமோ நித்திய சுயாதி பதி நீடு சேனாதிபதி சத்திய தயாபதி நமோ நமோ. 4. தூதர்கள் தேவா நமோ இயேசு சுவாமியே யோவா நமோ நமோ வேத வினாவா மெஞ்ஞான தீபா ஓதிய மூவா நமோ நமோ. 5. சீயோன் மணாளா நமோ நமோ விரு திரு மறையாளா நமோ நமோ நேய கணாளா நிறையொளி வாளா தூய பொற்றாளா நமோ நமோ. 6. பாவிகள் பாசனா நமோ நமோ வுயர் பரம பத்திராசனா நமோ நமோ தீவினை மோசனா திவ்விய போசனா காவெனை யோசனா நமோ நமோ. 7. வேதநாயகன் பா நமோ நமோ திரு மேசியா நண்பா நமோ நமோ ஆதியின் முன்பா வல்பா வோமேகா பாதருளன் பா நமோ நமோ.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyom Paathaa Namo Namo Alpaa Ombarap Pirama Namo Namo. Maathira Paraabara Vasthuvae Niraadhara Aadhara Karunaagara Namo Namo. 1. Saruvaesuranae Namonamokuru Sachsi Thaananthaa Namo Namo Maraidharu Poosura Maadhava Paraesura Muraiyinam Yaesura Namo Namo. 2. Thaeva Kumaaraa Namo Namo Nara Thiru Avathaaraa Namo Namo Moovariloruvaa Mokkidath Tharuvaa Seeva Soroopaa Namo Namo. 3. Suttha Vaanithiyae Namo Namo Athi Thooya Sannathiyo Namo Namo Nitthiya Suyaathi Pathi Neetu Saenaathibathi Satthiya Thayaabathi Namo Namo. 4. Thoodharkal Thaevaa Namo Yesu Suvaamiyae Yovaa Namo Namo Vaedha Vinaavaa Menjnjaana Theepaa Othiya Moovaa Namo Namo. 5. Seeyon Manaalaa Namo Namo Viru Thiru Maraiyaalaa Namo Namo Naeya Kanaalaa Niraiyoli Vaalaa Thooya Porraalaa Namo Namo. 6. Paavigal Paasanaa Namo Namo Vuyar Parama Patthiraasanaa Namo Namo Theevinai Mosanaa Thivviya Posanaa Kaavenai Yosanaa Namo Namo. 7. Vaedhanaayakan Paa Namo Namo Thiru Maesiyaa Nanpaa Namo Namo Aathiyin Munpaa Valpaa Vomaekaa Paadharulan Paa Namo Namo.