பாடல் #3909
வானாதி தாள் காட்டும்
🔤 Vaanaathi Thaal Kaattum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானாதி தாள் காட்டும் - நல்ல வாத்தி சுவிசேஷம். கோன் ஆதி யேசுகிறிஸ்து மொழிந்த தோர் கோதில்லா நீதி நிறைந்த சுவிசேஷம். 1. ஆதி ஒளி தோண நல்ல அறிவு மிகக் காண சத்திய நீதியின் வேர் ஊன அதை நீணிலத்தோர் பூண ஜாதிகளான சகல மனிதரும் சத்ய மறை என்று துத்யம் புரியவும். 2. அன்பு நிறைந்திடவும் கெட்ட ஆசை குறைந்திடவும் ஜீவ இன்பம் சிறந்திடவும் பாவ இருள்கள் மறைந்திடவும் முன்பு பிடித்த முரட்டாட்டத்தை விட்டு முற்றிலும் நற்குண சுத்தம் பெருகவும். 3. கார் இருள் நிங்கிடவும் பாவக் கயிறு பின்வாங்கிடவும் நித்த பேர் ஒளி ஓங்கிடவும் சத்ய பிரபல்யம் நூங்கிடவும் தாரணியில் உள்ள சர்வ மனிதரும் சத்ய பிதா எனும் நித்யரைச் சேரவும். 4. பாலகர்கள் கூடிடவும் நித்ய பரகதி தேடவும் ஜீவ காலங்கள் நீடிடவும் நித்ய கனமுடி சூடிடவும் கோலம் நிறைந்த மணவாளன் யேசுவைக் கூடி அனுதினம் பாடித் துதிக்கவும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanaathi Thaal Kaattum - Nalla Vaatthi Suvisaesham. Kon Aathi Yaesukiristhu Mozhindha Thor Kothillaa Neethi Niraindha Suvisaesham. 1. Aathi Oli Thona Nalla Arivu Migak Kaana Satthiya Neethiyin Vaer Oona Athai Neenilatthor Poona Jaathigalaana Sakala Manidharum Sathya Marai Enru Thuthyam Puriyavum. 2. Anpu Nirainthidavum Ketta Aasai Kurainthidavum Jeeva Inbam Siranthidavum Paava Irulkal Marainthidavum Munpu Pitittha Murattaattatthai Vittu Murrilum Narkuna Suttham Perugavum. 3. Kaar Irul Ningkidavum Paavak Kayiru Pinvaangkidavum Nittha Paer Oli Ongkidavum Sathya Pirapalyam Noongkidavum Thaaraniyil Ulla Sarva Manidharum Sathya Pithaa Enum Nithyaraich Saeravum. 4. Paalakarkal Kootidavum Nithya Parakathi Thaedavum Jeeva Kaalanggal Neetidavum Nithya Kanamuti Sootidavum Kolam Niraindha Manavaalan Yaesuvaik Kooti Anuthinam Paatith Thuthikkavum.