பாடல் #39081
நேச தேவ கிருபாசன
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
நேச தேவ கிருபாசன வந்தித்த வாசவ கன சீரா. இராசவ சந்நிதா தாசரை யாசித்த தேசுலவே கோவா. 1. சரணுச் சரணு பரவர கண்ணோக்கரா கருணைச் சூடு நேரா சுரரோச்சுதவு செய பய வலபுய தாசதிபதி தாதா 2. சுந்தர நரபட்ச வந்தவ கவனம் நீ ரந்தர பதசரணா பரேந்திர பாரக புராந்திய சந்தித்த மந்திர செப கருணா 3. தருமப் பரம ஒரு நிருப தேவத்தா உரிமைப் போத சீலா நரராச்சரிய நயதய சுயமய வடி தொழு மனுகூலா. 4. மைந்தரை நிதரெட்சை சிந்தை செய்பரமா வியந்தர தர தகர்வா படாந்தர பாதக நெடாந்தர நிர்மல தந்தை நின் மொழி பகர்வா.