பாடல் #39074
தாதா தாதா மாது மகதலை கை
🔤 Thaathaa Thaathaa Maathu Makathalai Kai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாதா தாதா மாது மகதலை கை தழுவத் தடையிடா முழு முதல் பாதத்தை 1. நாதா போதா ஆர்தானு னக் கிணை நம்பினேன் தம்பம், நின் செம்பொற் பதம் துணை 2. அந்தர வானிரவி சுந்தர மாக்கினை அந்தர மாம் புவிக்கருள் செய் நோக்கினை 3. தொலையா சமுத்திரம் அலையிடியு பத்திரம் இலை மனு சூத்திரம் நிலையுன் கால மாத்திரம் 4. பாவியென் றுணர்ந்து நீ கோபம் விட்டதுண்டோ தாவி கரையுங் கண்ணீர் மேவ கிருபை கொண்டே 5. பொன்னிணை யடி யன்று மண்ணில மீது சென்று தென்னகஞ் சிர சொன்று நுன்னம் மலையே இன்று 6. பாதார விந்த மல்லால் ஆதார மேது சொல்லாய் வாதா உன் மனங்கல்லா நீதானறிந்தா யெல்லா 7. அடி முடி ஒன்றில்லானே அடியிணை சரண்தானே கடியிடர் கெடவானே படியிடம் வந்த கோனே 8. நெல்லையன் சேய் பதம் சொல்ல நின் அருட் பதம் துல்லிப மே சதம் வல்லமை புகழ் நிதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaathaa Thaathaa Maathu Makathalai Kai Thazhuvath Thataiyitaa Muzhu Mudhal Paadhatthai 1. Naathaa Pothaa Aarthaanu Nak Kinai Nampinaen Thambam, Nin Sempor Patham Thunai 2. Andhara Vaaniravi Sundhara Maakkinai Andhara Maam Puvikkarul Sey Nokkinai 3. Tholaiyaa Samutthiram Alaiyitiyu Patthiram Ilai Manu Sootthiram Nilaiyun Kaala Maatthiram 4. Paaviyen Runarnthu Nee Kobam Vittathunto Thaavi Karaiyung Kanneer Maeva Kirupai Kontae 5. Ponninai Yati Yanru Mannila Meethu Senru Thennakanj Sira Sonru Nunnam Malaiyae Inru 6. Paathaara Vindha Mallaal Aathaara Maethu Sollaay Vaathaa Un Mananggallaa Neethaanarinthaa Yellaa 7. Ati Muti Onrillaanae Atiyinai Saranthaanae Katiyidar Kedavaanae Patiyidam Vandha Konae 8. Nellaiyan Saey Patham Solla Nin Arut Patham Thulliba Mae Satham Vallamai Pugazh Nidham