பாடல் #39072
கிறிஸ்தேசு நீ பரிந்து
🔤 Kiristhaesu Nee Parinthu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்தேசு நீ பரிந்து அதிசுந்தரக் கிருபை சொரிந்து 1. நரஸ்துதி பாடா தனுக்கிரகித்த ஞானசீவப் பெருமானே நாதனே கைவிடாதேயுன் திருவடி நம்பினேன் பரம சீமானே 2. அறத்தியல் பில்லா அந்தகநரனே அடைக்கல மெனச் சரண டைந்தேன் அநித்திய உலகால் சத்துரு வினையால் அருந்துயரால் மன துடைந்தேன் 3. நின்னையல்லால் நிற்பாக்கியன் எனக்கு நிலைத் திருப்பதற்கிட மிலையே உன்னத ஞானத் தொளிவினில் ஒளிவே உச்சித ஞானக் கன்மலையே 4. எத்தனை சேதம் சோதனை வரினும் இரங்கி ரட்சியும் பரிவாலே சத்திய வேதாட்சர ரகசியமே தரும கருணை மனுவேலே 5. தந்தையும் தாயும் சகலமும் நீயே தமியனின் பிழை பொறுப்பாயே வந்தனம் துதி சங்கிர்த்தனம் தினமே மகிழ்தெனிதை யத்திருப்பாயே 6. வெல்லையிற் பிறந்த மேசியா அரசே மேன்மை ஞானப் பிரபலனே நெல்லையிற் சிறந்த வேதநாயகன்பா நேசதவிது காவலனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhaesu Nee Parinthu Athisundharak Kirupai Sorinthu 1. Narasthuthi Paataa Thanukkirakittha Njaanaseevap Perumaanae Naadhanae Kaivitaathaeyun Thiruvati Nampinaen Parama Seemaanae 2. Aratthiyal Pillaa Andhakanaranae Ataikkala Menach Sarana Tainthaen Anitthiya Ulakaal Satthuru Vinaiyaal Arunthuyaraal Mana Thutainthaen 3. Ninnaiyallaal Nirpaakkiyan Enakku Nilaith Thiruppatharkida Milaiyae Unnatha Njaanath Tholivinil Olivae Uchsidha Njaanak Kanmalaiyae 4. Etthanai Saedham Sodhanai Varinum Irangki Ratsiyum Parivaalae Satthiya Vaethaatsara Rakasiyamae Tharuma Karunai Manuvaelae 5. Thanthaiyum Thaayum Sakalamum Neeyae Thamiyanin Pizhai Poruppaayae Vandhanam Thuthi Sangkirtthanam Thinamae Makizhthenithai Yatthiruppaayae 6. Vellaiyir Pirandha Maesiyaa Arasae Maenmai Njaanap Pirapalanae Nellaiyir Sirandha Vaedhanaayakanpaa Naesathavithu Kaavalanae