பாடல் #39067
எனையாண்ட பொருளே
🔤 Enaiyaanda Porulae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனையாண்ட பொருளே உந்தனா சீர் வாதந்தா வையா. அனையே தந்த வினையே சிந்த தனையே தந்தெந்தனையே மீண்டதுவே. 1. தந்தைனாதி தந்த குமாரா - எனை சுந்தர மேவிய மனுடவதாரா எந்தை யேசுநாத சுவாமியே. 2. மாது பொருட்டின் வாக்குத்தத்தா பாதக மற்ற மகா பரிசுத்தா வேதமளித்த வொரேயொரு கர்த்தாவே. 3. நெருக்கப்படும் நேரத் தெமை நேரிட் டுருக்கமாகக் கூப்பிடு மென்ற பெருக்கத் தேவ பிதாவின் றிருவுளமே. 4. அந்தரமா னோமாரை யுமறியோம் தந்தையர் தாயர் மைந்தரும் வீணே எந்தை யாபரா இரட்சியு மேசையா. 5. நம்பினர் வீணே நாடினர் வீணே அம்புவியின் கண்ணாத ரவில்லை எம் பராபரா கருணாம்பரமே. 6. கொடுமைக் காலங் கூப்பிடுகின்றோம் மிடிமைப் பட்டோம் வேதனை மெத்த அடிமைக் காரோ அருமைக் குலத் தேவே. 7. வேலிப் பயிரைத் தின்கத் தோன்றின மேய்ப்பர்களாட்டைச் சிதற வடித்தார் ஓலம் ஓலம் உரிமைச் சருவேசா. 8. மேய்ப்பர்கள் தங்களை மேய்த்துக் கொண்டார் மூப்பர்களுக்கு ணீதி யுமில்லை காப்பது கடனே கருணைத் திருவடிவே. 9. ஆடுகளெங்குஞ் சிதறிப் போனது காடுகளெங்குந் தேடிப் பாரும் ஓடின வாட்டி னொற்றைக் கோனாரே. 10. பார்ப்பாரில்லைப் பரிவாரில்லை கேட்பாரில்லைக் கேள்வியுமில்லை மூப்பா நீயே காப்பாய் குருநாதா. 11. நெல்லை வேதநாயகன் பாவா வல்ல தேவா மகிமைக் கோவா அல்பா ஓ மேகா வேகாவாவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enaiyaanda Porulae Undhanaa Seer Vaadhanthaa Vaiyaa. Anaiyae Thandha Vinaiyae Sindha Thanaiyae Thanthendhanaiyae Meendathuvae. 1. Thanthainaathi Thandha Kumaaraa - Enai Sundhara Maeviya Manudavathaaraa Enthai Yaesunaadha Suvaamiyae. 2. Maathu Poruttin Vaakkutthatthaa Paadhaka Martra Makaa Parisutthaa Vaedhamalittha Voraeyoru Kartthaavae. 3. Nerukkappatum Naerath Themai Naerit Turukkamaagak Kooppitu Mendra Perukkath Thaeva Pithaavin Riruvulamae. 4. Andharamaa Nomaarai Yumariyom Thanthaiyar Thaayar Maindharum Veenae Enthai Yaabaraa Iratsiyu Maesaiyaa. 5. Nampinar Veenae Naatinar Veenae Ampuviyin Kannaadha Ravillai Em Paraabaraa Karunaambaramae. 6. Kotumaik Kaalang Kooppitukinrom Mitimaip Pattom Vaedhanai Mettha Atimaik Kaaro Arumaik Kulath Thaevae. 7. Vaelip Payiraith Thinkath Thonrina Maeypparkalaattaich Sidhara Vatitthaar Olam Olam Urimaich Saruvaesaa. 8. Maeypparkal Thanggalai Maeytthuk Kontaar Moopparkalukku Neethi Yumillai Kaappathu Katanae Karunaith Thiruvativae. 9. Aatugalengkunj Sidharip Ponathu Kaatugalengkun Thaetip Paarum Otina Vaatti Norraik Konaarae. 10. Paarppaarillaip Parivaarillai Kaetpaarillaik Kaelviyumillai Mooppaa Neeyae Kaappaay Kurunaathaa. 11. Nellai Vaedhanaayakan Paavaa Valla Thaevaa Makimaik Kovaa Alpaa O Maekaa Vaekaavaavae.