பாடல் #39065
ஓ ஓ ஓ துங்க சீவி பரிசுத்த
🔤 O O O Thungga Seevi Parisuttha
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ ஓ ஓ துங்க சீவி பரிசுத்த ஓ மகத்துவ தேவா. சீரங்க பரம காட்சி திவ்விய நித்திய குமாரா. 1.மேலோக வானந்த பரமனீ பூலோக மீதிரங்கி இஸ்திரி மாமரி சந்த மாதா மைந்தனாக வந்தவா ஓலமோலமே யுனது சரணங்கா உனத வஸ்துவாகிய திவ்விய ரூபஞான உலாச சருவ வுலகொரு மத்திஸ்த இயேசு ராசா மனுவேல். 2. வேதாக மங்களி னுருவ நீ தீதான பாதகங் களற்ற வஸ் தாதி யானந்த நாதா சொந்த வாதி மைந்தனே நீதி யாசனா நெறியின களங்கா நிமல கிறிஸ்து நாயக நித்திய யேயோவா நிதான சமஸ்த பூலோக ரட்சகா நீயேசு ராசா மனுவேல். 3. வானோர் கணந்தொழு மரசனீ கானானு தேச மெங்கும் விஸ் தார சனங்களோடே யஞ்சல் கூறுந் தஞ்சமே ஞானாதிக்கமே நசரைப் பதியின் கோ நாமகீர்த்தன வேதநாயகன் பா தானான திரித்துவ யேகத்துவா சரி சாமி யேசு ராசா நி புணா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O O O Thungga Seevi Parisuttha O Makatthuva Thaevaa. Seerangga Parama Kaatsi Thivviya Nitthiya Kumaaraa. 1.maeloga Vaanandha Paramanee Poologa Meethirangki Isthiri Maamari Sandha Maathaa Maindhanaaga Vandhavaa Olamolamae Yunathu Saranangkaa Unatha Vasthuvaakiya Thivviya Roobanjaana Ulaasa Saruva Vulakoru Matthistha Yesu Raasaa Manuvael. 2. Vaethaaga Manggali Nuruva Nee Theethaana Paadhakang Kalartra Vas Thaathi Yaanandha Naathaa Sondha Vaathi Maindhanae Neethi Yaasanaa Neriyina Kalangkaa Nimala Kiristhu Naayaka Nitthiya Yaeyovaa Nithaana Samastha Poologa Ratsakaa Neeyaesu Raasaa Manuvael. 3. Vaanor Kananthozhu Marasanee Kaanaanu Thaesa Mengkum Vis Thaara Sananggalotae Yanjjal Koorun Thanjjamae Njaanaathikkamae Nasaraip Pathiyin Ko Naamakeertthana Vaedhanaayakan Paa Thaanaana Thiritthuva Yaegatthuvaa Sari Saami Yaesu Raasaa Ni Punaa.