பாடல் #39064
பரகுமாரா யெருசலை
🔤 Parakumaaraa Yerusalai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரகுமாரா யெருசலைத் துரைகுமாரா ஓ குமரையா 1.கருணைஞான வாருதியனற் கம்ப மேவிய சம்பிரமஞ்செறி கடற் கலங்கிட வடிக்கு மிங்கித முனி வணங்கிய சரண பங்கையா. 2. இருளற வருநர பராபர யேசு நாதனே யுயர்ந்த யெந்தையாபர சொந்த மைந்தனம் மங்கை மா மரி தந்த சுந்தரம். 3. அதிசய சுய சருவ வல்லப ஆரணப் பிரகாச வர்ச்சய துதிமுழங்கிய நசரையம் பதி தனில் விளங்கிய தவிது வந்தனம். 4. சீவியக் கிருபாசனந் தனிற் சிறந்து வீற்றிருந்து கந்து வானவர் ஓவியமாய் வேத நாயகனும் பா உன்னத மங்களஞ் சொன்ன சங்கீர்த்தனம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parakumaaraa Yerusalaith Thuraikumaaraa O Kumaraiyaa 1.karunainjaana Vaaruthiyanar Kamba Maeviya Sampiramanjseri Katar Kalangkida Vatikku Mingkidha Muni Vanangkiya Sarana Pangkaiyaa. 2. Irulara Varunara Paraabara Yaesu Naadhanae Yuyarndha Yenthaiyaabara Sondha Maindhanam Mangkai Maa Mari Thandha Sundharam. 3. Athisaya Suya Saruva Vallapa Aaranap Pirakaasa Varcchaya Thuthimuzhangkiya Nasaraiyam Pathi Thanil Vilangkiya Thavithu Vandhanam. 4. Seeviyak Kirupaasanan Thanir Siranthu Veerrirunthu Kanthu Vaanavar Oviyamaay Vaedha Naayakanum Paa Unnatha Manggalanj Sonna Sangkeertthanam.