பாடல் #39063
அல்லாயி யேசு மகராசே
🔤 Allaayi Yaesu Makaraasae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லாயி யேசு மகராசே கிறிஸ்து பரதீசே பல கர்த்த ருரைத்த மோசே. சொல்லாந்த வாரி சுந்தர சிங்காரி 1.சருவாந்திரியாமி தயவுசெய் நேமி சற்சிதானந்த குருசாமி பல. 2. தற்சுய சொரூபி சருவ வியாபி சத்திய பரிசுத்த ரூபி பல. 3. ஆரணப் பிரகாசா அக்கிரம வினாசா பூரணக் கிருபை விலாசா பல. 4. பக்தர் பரிபாலா பத்த ரனுகூலா கத்தா கருணை மனுவேலா பல. 5. மூவா முதல்வா முன்னவா பின்னவா காவா சீ வா வொரே யோவா பல. 6. காத்தருளுமையா காரணக் கிருபையா தோத்திரந் தோத்திர மேசையா பல. 7. வேதநாயகன் பா வோத வருளன்பா மேலான மோக்கிஷ பேரின் பா பல.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaayi Yaesu Makaraasae Kiristhu Paratheesae Pala Karttha Ruraittha Mosae. Sollaandha Vaari Sundhara Singkaari 1.saruvaanthiriyaami Thayavusey Naemi Sarsithaanandha Kurusaami Pala. 2. Tharsuya Soroopi Saruva Viyaapi Satthiya Parisuttha Roopi Pala. 3. Aaranap Pirakaasaa Akkirama Vinaasaa Pooranak Kirupai Vilaasaa Pala. 4. Pakthar Paripaalaa Pattha Ranukoolaa Katthaa Karunai Manuvaelaa Pala. 5. Moovaa Mudhalvaa Munnavaa Pinnavaa Kaavaa See Vaa Vorae Yovaa Pala. 6. Kaattharulumaiyaa Kaaranak Kirupaiyaa Thotthiran Thotthira Maesaiyaa Pala. 7. Vaedhanaayakan Paa Vodha Varulanpaa Maelaana Mokkisha Paerin Paa Pala.