பாடல் #39061
மேசியா
🔤 Maesiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேசியா யேசுநாத யே யோவா இம்மானு வேலே காவா. 1.மேசியாவாக வன்று மீட்க வருவாரென்று தாச ரெழுதித்தந்த சாஸ்திரப்படி பிறந்த. 2. செல்லுதற் களவில்லாத தூயபரிசுத்த நீத வல்லமை தேவப்பிரசாத மகிமைக் கிறிஸ்துநாத. 3. அத்தனை தேவகோப மாற்றியருள் தயாப வித்தக ஞானதீப மிக்கநன்மைப் பிரதாப. 4. சத்துரு வினைக்கும் வஞ்சம் சற்பினை நினைக்கும் நெஞ்சம் கர்த்தனே என்பெலன் கொஞ்சம் காப்பாற்றுவா யுன்தஞ்சம். 5. வானில் விளங்குமன்னா வடிவத பரஞ்சிபொன்னா ஞானமிகு விற்பன்னா நாளுமுமக் கோசன்னா. 6. பாவியை முகம்பாரும் பக்கிஷமாக வாரும் ஆவலா யென்னைச்சேரும் ஆசீர்வாதந் தாரும். 7. வேதநாயகன் பாட விண்ணவரெல்லாம் கொண்டாட நீதியின் வழியைநாட நித்திய மகிழ்ச்சிசூட.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maesiyaa Yaesunaadha Yae Yovaa Immaanu Vaelae Kaavaa. 1.maesiyaavaaga Vanru Meetka Varuvaarenru Thaasa Rezhuthitthandha Saasthirappati Pirandha. 2. Selludhar Kalavillaadha Thooyaparisuttha Needha Vallamai Thaevappirasaadha Makimaik Kiristhunaadha. 3. Atthanai Thaevakoba Maarriyarul Thayaaba Vitthaka Njaanatheeba Mikkananmaip Pirathaaba. 4. Satthuru Vinaikkum Vanjjam Sarpinai Ninaikkum Nenjjam Kartthanae Enpelan Konjjam Kaappaarruvaa Yunthanjjam. 5. Vaanil Vilangkumannaa Vativatha Paranjsiponnaa Njaanamiku Virpannaa Naalumumak Kosannaa. 6. Paaviyai Mugampaarum Pakkishamaaga Vaarum Aavalaa Yennaichsaerum Aaseervaadhan Thaarum. 7. Vaedhanaayakan Paada Vinnavarellaam Kontaada Neethiyin Vazhiyainaada Nitthiya Makizhchsisooda.