பாடல் #39060
யேசுநாதா கடைக்கண்பார்
🔤 Yaesunaathaa Kataikkanpaar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசுநாதா கடைக்கண்பார் கிருபையாக யேசுநாதா கடைக்கண்பார். 1.மாசிலா வஸ்துயர் பிரகாச நேர்முத் திரித்துவ மேசியா மெய்ப்பரத்து நாசரேத்துக் கிறிஸ்து. 2. காவிலாதத்தின் மங்கை யேவை யாரக்கிரமங்கள் தேவகோபத்தில் வந்த யாவுமாறப் பிறந்த. 3. ஏவாள் பறித்து கந்த பாவாசையைக் கடிந்த தாவீதர்ச்சிக்கு மைந்ததேவா செகத்தில் வந்த. 4. உன்னதத்திலே யிருக்கு முன்னதப் பரமருக்கும் இன்னிலத்து நரருக்கும் பின்னுமுறவைப் பெருக்கும். 5. மண்ணின்மீதே நரரும் விண்ணின்மீதே சுரரும் புண்ணியா வென்றுருகு மெண்ணிலா நன்மைமிகும். 6. ஆதாம் விழுந்த வினையாலே யழிந்த வெனை வேதா நடத்துந்துணை வேறார்சொலுங் கருணை. 7. துட்டலகை கெட்ட தலைப்பட்டழிய விட்டரிய சிட்டர்களுக் கிட்டமருள் மட்டளவில்லா மகத்துவ. 8. மிக்க பரம்புவிக்கும் வேதநாயகன் கவிக்கும் பக்கிஷ மனவுருக்கப் பரம திருவிரக்க.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesunaathaa Kataikkanpaar Kirupaiyaaga Yaesunaathaa Kataikkanpaar. 1.maasilaa Vasthuyar Pirakaasa Naermuth Thiritthuva Maesiyaa Meypparatthu Naasaraetthuk Kiristhu. 2. Kaavilaadhatthin Mangkai Yaevai Yaarakkiramanggal Thaevakobatthil Vandha Yaavumaarap Pirandha. 3. Aevaal Paritthu Kandha Paavaasaiyaik Katindha Thaaveedharchsikku Maindhathaevaa Segatthil Vandha. 4. Unnathatthilae Yirukku Munnathap Paramarukkum Innilatthu Nararukkum Pinnumuravaip Perukkum. 5. Manninmeethae Nararum Vinninmeethae Surarum Punniyaa Venruruku Mennilaa Nanmaimikum. 6. Aathaam Vizhundha Vinaiyaalae Yazhindha Venai Vaethaa Natatthunthunai Vaeraarsolung Karunai. 7. Thuttalakai Ketta Thalaippattazhiya Vittariya Sittarkaluk Kittamarul Mattalavillaa Makatthuva. 8. Mikka Parampuvikkum Vaedhanaayakan Kavikkum Pakkisha Manavurukkap Parama Thiruvirakka.