பாடல் #39057
நீ தவறாதா நீ தாபரதாதா
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
நீ தவறாதா நீ தாபரதாதா அத்தா கர்த்தா பத்தா. சோதி யுன்னதமான நேமி சுந்தரக் கிறிஸ்தேசு சுவாமி. 1.அந்தர சொர்க்கம் அனந்த கோடாகோடி அண்டமுமுண்டு செய்தா தரித்தாண்டருள் தந்தையனாதி பிதாவினொரே யொரு தற்சுயரூப குமார தயாபரா. 2. அட்சய தேவ மகத்துவ காரண அற்புத ஏக திரித்துவமாகிய முச்சுடரே வந்து ரட்சித்தடிமையை முற்றினுங் காத்தருள் நித்ய கிருபாகர. 3. மங்கள இங்கித லங்கிருத சங்கீத வாத்திய கீர்த்தனத்தால் தொழுதேற்றிய துங்கன் தவிதிசறேல் வங்கிடாதிப துத்திய சுபுத்திர சமுத்திர கிறிஸ்த்துவே. 4. ஞானமிகும் பரிசுத்தமும் நீதியும் நன்மையும் ஓங்குமோ ருண்மைப் பிதாசுதன் வானவர் பூதலர் பாதலத்தோரும் மகிழ்ந்து பணிந்து வணங்கும் பராபரா. 5. சத்துருவாகிய ஆதிசர்ப்பத்தின் தலையையுடைத்த சங்கிராம கோலாகலா மெத்த மெத்த வேதநாயகன் பாடிய மெய்யான யேசுக்கிறிஸ்து மேசையா.