பாடல் #39055
அண்ட சக்கர ஞானே
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
அண்ட சக்கர ஞானேந் திரசோதி மனுடனான திட்டாந்தர நீதி. 1.பண்டு படு கொடிய வண்டிடலகை பய மண்டியழ லெரிய விண்டவதிக செய. 2. பொங்கு முலகில் வரு மெங்கள் பரம குரு துங்க மகிமை தரு சங்கை யரச னொரு. 3. அம்பர குருபர உம்பர்கள் சுரநர ரும்பெற அருடர நம்பினேன் முனம்வர. 4. வஞ்ச மடையர் பயமிஞ்சு துனத பையம் அஞ்சல் புரி சமைய நெஞ்ச மிடு முதையம். 5. பொன்ற விழு கழுது சென்று சமரிடுது நின்று னருள் செய்வது நன்று தருண மிது. 6. வெல்லை யினதிதவ நல்லை யனருணவ சொல்லை யனுடசுப நெல்லையனணி செப.