பாடல் #39051
தேவ தேவ தேவ தம்பிரானே
🔤 Thaeva Thaeva Thaeva Thampiraanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தேவ தேவ தம்பிரானே ஏசுநாதா காவந்த பாவ மறக் கடத்தேற்று பாதா. 1.மன்னுயிருக்காய்ப் பிறந்த வல்லமைப் பிரதாபா தன்னிகரில்லாத பிதாத்தற்சுய சொரூபா. 2. மட்டில்லா மகத்துவத்தின் மானிடவதாரா கெட்ட மக்களான வர்க்குக் கிருபையின் குமாரா. 3. உன்னதத்திலிருந்து வந்த உத்தம சருவேசா மன்னவன்தவீது குல மானுவேலி ராஜா. 4. பரலோகம் பூதலம் பாதல விலாசா நரனாக மேவி வந்த ஞானப் பிரகாசா 5. முத்தி வழி காட்ட வந்த முத் தொழித் திரியேகா சித்தம் வைத்துக் காத்தருள் வாய்த் திவ்விய சினேகா. 6. அன்றன் றும் வானவர்களர்ச்சிக்கும் வஸ்துவே யென்றென் றும் பாவிகளை யிரட்சிக்குங் கிறிஸ்துவே 7. பாது காத் தெமக் கிரங்கும் பரம கிருபாசன்னா வேத நாயகன் றுதிக்கு மேசியா வோசன்னா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Thaeva Thaeva Thampiraanae Aesunaathaa Kaavandha Paava Marak Katatthaerru Paathaa. 1.mannuyirukkaayp Pirandha Vallamaip Pirathaapaa Thannigarillaadha Pithaattharsuya Soroopaa. 2. Mattillaa Makatthuvatthin Maanidavathaaraa Ketta Makkalaana Varkkuk Kirupaiyin Kumaaraa. 3. Unnathatthilirunthu Vandha Utthama Saruvaesaa Mannavanthaveethu Kula Maanuvaeli Raajaa. 4. Paralogam Poodhalam Paadhala Vilaasaa Naranaaga Maevi Vandha Njaanap Pirakaasaa 5. Mutthi Vazhi Kaatta Vandha Muth Thozhith Thiriyaekaa Sittham Vaitthuk Kaattharul Vaayth Thivviya Sinaekaa. 6. Andran Rum Vaanavarkalarchsikkum Vasthuvae Yenren Rum Paavigalai Yiratsikkung Kiristhuvae 7. Paathu Kaath Themak Kirangkum Parama Kirupaasannaa Vaedha Naayakan Ruthikku Maesiyaa Vosannaa.