பாடல் #39049
பர சொரூப மே தேவ
🔤 Para Sorooba Mae Thaeva
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பர சொரூப மே தேவ பதி மனுவேல் திருவடிவு. திருப்புகழ் மேவிய சுந்தர திரித்து வகாரண விந்தைய ரொருத்தருங்காணாத் தந்தைய ரொன்றதா முரிமையின் மைந்தா. 1.அதமெவை பாதக வடமே அறவொருமா மரியிடமே சுதனென மேவிய திடமே சுரர் தொழு தாடின நடமே சித ஞானாதி சயமே தேவாதி பதி நயமே இத முறு நித்திய ஜீவ இயேசுராஜ மெய்த்தேவ. 2. அளவிலடங்காத் திரமே அட்சயப் பரா பரமே உளமகிழ் ஞானாகரமே உன்னதத்தரா தரமே விளம்பரிய கரிசனமே மேலான தெரிசனமே வளமிகுங் கிருபை கூரையா மானுவேலேசு மேசையா 3. அரிய கிருபை யினுடைய அதிபதியே சரணெனையாள் பெரிய வலமையின் மகிமைப் பிரதாபி சரணெனையாள் ஒருவருக்கு மெட்டாத உன்னதனே சரணெனை யாள் திருநெல்லையான் கவி நேச திவ்விய யேசு மகராஜ.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Para Sorooba Mae Thaeva Pathi Manuvael Thiruvativu. Thiruppugazh Maeviya Sundhara Thiritthu Vakaarana Vinthaiya Roruttharungkaanaath Thanthaiya Rondrathaa Murimaiyin Mainthaa. 1.adhamevai Paadhaka Vatamae Aravorumaa Mariyidamae Sudhanena Maeviya Thidamae Surar Thozhu Thaatina Natamae Sidha Njaanaathi Sayamae Thaevaathi Pathi Nayamae Idha Muru Nitthiya Jeeva Yesuraaja Meytthaeva. 2. Alavilatangkaath Thiramae Atsayap Paraa Paramae Ulamakizh Njaanaagaramae Unnathattharaa Tharamae Vilambariya Karisanamae Maelaana Therisanamae Valamikung Kirupai Kooraiyaa Maanuvaelaesu Maesaiyaa 3. Ariya Kirupai Yinutaiya Athibathiyae Saranenaiyaal Periya Valamaiyin Makimaip Pirathaapi Saranenaiyaal Oruvarukku Mettaadha Unnathanae Saranenai Yaal Thirunellaiyaan Kavi Naesa Thivviya Yaesu Makaraaja.