பாடல் #39048
நல்லாயனேசு சுவாமி
🔤 Nallaayanaesu Suvaami
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லாயனேசு சுவாமி ராஜ தாவீ துடு மகவு ஒரே மகவு ஆட்டுக்கா யுயிர் தாரார். 1.எல்லார்க்கும் பெரியானெம் பிரான் றம்பிரான் ஏக வஸ்தொரே யே யோவா மா தேவ கிறிஸ்து நீ காவா. நல்லாயன் 2. மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய வானப் பரம குமாராவே யதி ஞானத்திற மிகும் வீராவே. 3. விண்ணாடர் முழங்க மண்ணாடர் விளங்க மேவிவந்த மேசையாவே படு பாவி சொந்த மேசையாவே. 4. மிக்க ஞான சந்தோட குணாவா மெயச் சுவிசேட மறை நூலா பர மப் பிரவடீக மனுவேலா. 5. சீராட்டுக் காட்டி யெந்தை யார் தந்தையார் திருக்கடைக் கண்ணாற் பார்த்தாரே வந்து திரும்பத் திரும்ப வெனைச் சேர்த்தாரே. 6. விருத்த சேதன முறைமையை யடுத்தார் கிறிஸ்தியே செனப் பெயரெடுத்தார் ரெமை மீட்க விந்த வேடந் தொடுத்தார். 7. ஆட்டைக் கூட்டியோர் தொழுவத்திலடைப்பார் அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பாரன் பாகத் தோளினிலே யெடுப்பார். 8. வேத கற்பனை யேற் பாட்டுப் பெட்டி வேத நாயகன் பாட்டுக் கெட்டி யுயர் தேவ செம்மரியாட்டுக் குட்டி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallaayanaesu Suvaami Raaja Thaavee Thutu Makavu Orae Makavu Aattukkaa Yuyir Thaaraar. 1.ellaarkkum Periyaanem Piraan Rampiraan Aega Vasthorae Yae Yovaa Maa Thaeva Kiristhu Nee Kaavaa. Nallaayan 2. Mannar Mannar Kontaatiya Neetiya Vaanap Parama Kumaaraavae Yathi Njaanatthira Mikum Veeraavae. 3. Vinnaadar Muzhangga Mannaadar Vilangga Maevivandha Maesaiyaavae Patu Paavi Sondha Maesaiyaavae. 4. Mikka Njaana Santhoda Kunaavaa Meyach Suvisaeda Marai Noolaa Para Map Piravateega Manuvaelaa. 5. Seeraattuk Kaatti Yenthai Yaar Thanthaiyaar Thirukkataik Kannaar Paartthaarae Vanthu Thirumbath Thirumba Venaich Saertthaarae. 6. Viruttha Saedhana Muraimaiyai Yatutthaar Kiristhiyae Senap Peyaretutthaar Remai Meetka Vindha Vaedan Thotutthaar. 7. Aattaik Koottiyor Thozhuvatthilataippaar Ariya Nalla Maeycchal Kotuppaaran Paagath Tholinilae Yetuppaar. 8. Vaedha Karpanai Yaer Paattup Petti Vaedha Naayakan Paattuk Ketti Yuyar Thaeva Semmariyaattuk Kutti.