பாடல் #39046
மாய வாழ்வை நம்பாதே
🔤 Maaya Vaazhvai Nampaathae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாய வாழ்வை நம்பாதே மனமே வாதையாம் பொல்லாத விக்கினமே தீயதுட்டப் பேய் நகைக்கத் தீமை புரியாதே 1.விந்தை மாதர் தந்தை தாயர் மைந்தர் தானும் பெந்துள் ளோரும் நிந்தை செய் தொழிந்து போவர் தெந்தனம் பண்ணாதே 2. ஆடு மாடு வீடு வாசல் மாட கூட மேடை யோடு பாடு மூடுங் காடு சாடுங் கேடு நினையாதே 3. ஆனை கொக்குச் சேனை மெயக்கும் பானுதிக்கும் பனியொக்கும் வேன லுக்கும் விழலுக்கும் ஏன் மலைக்கிறாய் நீ 4. வாகு தங்கு போக சங்கை மோக முங்கி யாக மங்கி யே கலங்கி யே குரங்கி நீ குரங்கா காதே 5. வாணிபங்களே மிகுந்துந் தோணி வங்கமே புகுந்தும் வீணிலங்க மேநினைந் திங் காணுவங் கொள்ளாதே 6. பொட்டரிக்குஞ் சுட்டெரிக்கும் துட்டர் கொட்ட மிட்டெடுக்கும் நட்டமிக்கும் கெட்டலைக்கும் பட்டிறக்கப் போறாய் 7. சூது பொம்மலாட்டைச் சாடு துரோகமாகிய கேட்டைப் போடு வேதநாயகன் பாட்டைப்பாடு மேசியாவைத் தேடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaya Vaazhvai Nampaathae Manamae Vaathaiyaam Pollaadha Vikkinamae Theeyathuttap Paey Nakaikkath Theemai Puriyaathae 1.vinthai Maadhar Thanthai Thaayar Maindhar Thaanum Penthul Lorum Ninthai Sey Thozhinthu Povar Thendhanam Pannaathae 2. Aatu Maatu Veetu Vaasal Maada Kooda Maetai Yotu Paatu Mootung Kaatu Saatung Kaetu Ninaiyaathae 3. Aanai Kokkuch Saenai Meyakkum Paanuthikkum Paniyokkum Vaena Lukkum Vizhalukkum Aen Malaikkiraay Nee 4. Vaaku Thangku Poga Sangkai Moga Mungki Yaaga Mangki Yae Kalangki Yae Kurangki Nee Kurangkaa Kaathae 5. Vaanibanggalae Mikunthun Thoni Vanggamae Pukunthum Veenilangga Maeninain Thing Kaanuvang Kollaathae 6. Pottarikkunj Sutterikkum Thuttar Kotta Mittetukkum Nattamikkum Kettalaikkum Pattirakkap Poraay 7. Soothu Pommalaattaich Saatu Thurogamaakiya Kaettaip Potu Vaedhanaayakan Paattaippaatu Maesiyaavaith Thaetu