பாடல் #39044
அடடா பழைய சற்பமே
🔤 Adataa Pazhaiya Sarpamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடடா பழைய சற்பமே சோதனை விட்டு விடடா அதென சொற்பமே விடமேறிய உனது முடியைத் தகர்த்துடைக்க வேதனிதல்லோ வந்தார் வாதைப்படுவாய் போடா 1.அன்று பரன் சமுகம் நின்று கருவங்கள் கொண் டகன்று நரகில் விழுந்தாய் பின்னுஞ் சென்று விலகுங்கனி தின்று கெடுவதற்கு திமை ஏவைக்கு மொழிந்தாய் அதற்கென றின்று கிறிஸ்து வந்த தொன்றுமுணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா திருடா மெத்தத் துள்ளாதே பொருடா புத்தி சொல்கிறேன் 2. முந்தும் மனுடர் தமை நிந்தைப் படுத்த வேண்டி முடுகிவனத்திலடுத்தாய் ஆதி தந்த வரங்களை யிழந்து போவதற்கு சதி கற்பனைகள் தொடுத்தாய் இப்போ எந்தையுனையழிக்க வந்ததறிவாய் நிசெய் இடக்கும் பவத்தினிச்சை கொடுக்கும் அக்கினி அம்பைத் தொடுக்கும் உனதுடைய துடுக்கும் என்னடா செய்யும் 3. அல்லும் பகலுமாகச் சல்லியரிக்கிராப்போல் அரித்து மதிமயக்கிறாய் உயிர் கொல்லும்படி மூவாசைத் தொல்லைகளை மனதில் கொடுத்து மிகத்தியக்கிறாய் இன்று வெல்லைப்பதியில் வந்த செல்லத்துரைமுன் உந்தன் மெலுக்கும் ஒன்றுமில்லா வீண் பிலுக்குங் குலுக்கு முடல் அலுக்கும் நெடிய தலைத் துலுக்கும் எங்கடா போகும் 4. சிங்கம் போலக் கெற்சித் தெங்குஞ் சுற்றித்திரிந்து தீமை செயத் தொடுக்கிறாய், கன பங்கமான சிற்றின்பங்கள் மிகவும் காட்டி பரம நன்மை தடுக்கிறாய் உன தங்கம் பதறவென்ற துங்கன் தவிதெனக்குண் டதத்துப் படபடத்துக் குதித்துத் துடி துடித்து மிதத்துக் கடுகடுத்து மதத்துப் பேசாதே போடா 5. மாட்டுக் குடிலிலே மேனாட்டுத்துரை பிறந்துன் கேட்டைத் தொலைத்துப் போட்டார் குற்றச் சாட்டுகளை யினிமேல் கேட்டுப் புறக்கணித்தேன் தன்னை விடவுமாட்டார் கவி தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கமாச்சு சேரடா ஒரு கை வந்து பாரடா தவிது வங்கிஷ வேரடா உனை வெற்றி கொண் டாரடா பத்திரஞ் சொன்னேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Adataa Pazhaiya Sarpamae Sodhanai Vittu Vidataa Athena Sorpamae Vidamaeriya Unathu Mutiyaith Thakartthutaikka Vaedhanidhallo Vanthaar Vaathaippatuvaay Potaa 1.anru Paran Samugam Ninru Karuvanggal Kon Takanru Narakil Vizhunthaay Pinnunj Senru Vilakunggani Thinru Ketuvatharku Thimai Aevaikku Mozhinthaay Adharkena Rinru Kiristhu Vandha Thonrumunaraathae Nee Irutaa Iru Kan Ketta Kurutaa Samaridataa Thirutaa Metthath Thullaathae Porutaa Putthi Solkiraen 2. Munthum Manudar Thamai Ninthaip Patuttha Vaenti Mutukivanatthilatutthaay Aathi Thandha Varanggalai Yizhanthu Povatharku Sathi Karpanaigal Thotutthaay Ippo Enthaiyunaiyazhikka Vandhatharivaay Nisey Idakkum Pavatthinichsai Kotukkum Akkini Ampaith Thotukkum Unathutaiya Thutukkum Ennataa Seyyum 3. Allum Pakalumaagach Salliyarikkiraappol Aritthu Mathimayakkiraay Uyir Kollumbati Moovaasaith Thollaigalai Manathil Kotutthu Migatthiyakkiraay Inru Vellaippathiyil Vandha Sellatthuraimun Undhan Melukkum Onrumillaa Veen Pilukkung Kulukku Mudal Alukkum Netiya Thalaith Thulukkum Enggataa Pokum 4. Singgam Polak Kersith Thengkunj Surritthirinthu Theemai Seyath Thotukkiraay, Kana Panggamaana Sirrinbanggal Migavum Kaatti Parama Nanmai Thatukkiraay Una Thanggam Patharavendra Thunggan Thavithenakkun Tathatthup Patapatatthuk Kuthitthuth Thuti Thutitthu Midhatthuk Katugatutthu Mathatthup Paesaathae Potaa 5. Maattuk Kutililae Maenaattutthurai Piranthun Kaettaith Tholaitthup Pottaar Kurtrach Saattugalai Yinimael Kaettup Purakkanitthaen Thannai Vidavumaattaar Kavi Theettum Vaedhanaayakan Paattum Perukkamaachsu Saerataa Oru Kai Vanthu Paarataa Thavithu Vangkisha Vaerataa Unai Verri Kon Taarataa Patthiranj Sonnaen