பாடல் #39042
தோத்திர சங்கீர்த்தன
🔤 Thotthira Sangkeertthana
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோத்திர சங்கீர்த்தன துத்தியமே சதா துதி புகழ் வந்தனம் நித்தியமே 1. காத்திரமான கிருபைசெய் ராஜா கதி வழி காட்டும் பிரகாசா நேத்திரம் போலெமைக் காத்த மாநேசா நிச்சய அச்சய உச்சித வாசா - சதா 2. தேடிக் கரிசித்த ஜீவ சகாயா சிறுமை யகற்று முபாயா நாடியுனின் தயை பாடச் செயோயா நல்வர மரூடூயா அல்லேலூயா - ஜெயா 3. மானிடர் வாழ்கவே மாடடை கூடமே வந்த இவ்வேடஞ் சுவிசேடமே வானிடம் பாவிகள் ஜீவகிரீடமே மகிழ்ந்தனர் மனம் பரருகந்த பொற்பீடமே 4. மேசியா நாதா யேசு நற்போதா வேண்டுதற் கருள் பிரசாதா தாசனெலியா பேசு சங்கீதா சந்தத மெந்தையே சுந்தரப் பதந்தாதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thotthira Sangkeertthana Thutthiyamae Sathaa Thuthi Pugazh Vandhanam Nitthiyamae 1. Kaatthiramaana Kirupaisey Raajaa Kathi Vazhi Kaattum Pirakaasaa Naetthiram Polemaik Kaattha Maanaesaa Nicchaya Acchaya Uchsidha Vaasaa - Sathaa 2. Thaetik Karisittha Jeeva Sakaayaa Sirumai Yakarru Mupaayaa Naatiyunin Thayai Paadach Seyoyaa Nalvara Marootooyaa Allaelooyaa - Jeyaa 3. Maanidar Vaazhkavae Maadatai Koodamae Vandha Ivvaedanj Suvisaedamae Vaanidam Paavigal Jeevakireedamae Makizhndhanar Manam Pararugandha Porpeedamae 4. Maesiyaa Naathaa Yaesu Narpothaa Vaentudhar Karul Pirasaathaa Thaasaneliyaa Paesu Sangkeethaa Sandhatha Menthaiyae Sundharap Pathanthaathaa