பாடல் #39036
கருணா கரமே அம்பரமே வா
🔤 Karunaa Karamae Ambaramae Vaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணா கரமே அம்பரமே வா சரணிரு பங்கயமே சித்தம்பர திரு நர வுருவதிசயமே காரண பரம தேவ குருவே ஆ 1. அதமேவை தரு தீங்காலுலகதில் வரு ஆதியினோர் மைந்தா ஓகோ இதமன மோங்கி நேசமோடு தொழ எந்தாய் சரணந்தா ஆ 2. சாற்றிய மாமறை ஞானாதிபனே தயை மேவிய நங் கோ ஓ கோ ஏற்றிய அடியவர் தம் வினை நீவிய ஏகா எமையுங் காகா ஆ 3. அருணோதயமே வான் வருமன்னா ஐ சூரிய சம்பன்னா ஓ கோ திருநெல்லை வேதநாயக சாஸ்திரி தேவே ஓ சன்னா ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaa Karamae Ambaramae Vaa Saraniru Panggayamae Sitthambara Thiru Nara Vuruvathisayamae Kaarana Parama Thaeva Kuruvae Aa 1. Adhamaevai Tharu Theengkaalulakathil Varu Aathiyinor Mainthaa Oko Idhamana Mongki Naesamotu Thozha Enthaay Sarananthaa Aa 2. Saarriya Maamarai Njaanaathibanae Thayai Maeviya Nang Ko O Ko Aerriya Atiyavar Tham Vinai Neeviya Aekaa Emaiyung Kaakaa Aa 3. Arunodhayamae Vaan Varumannaa Ai Sooriya Sambannaa O Ko Thirunellai Vaedhanaayaka Saasthiri Thaevae O Sannaa Aa