பாடல் #39034
சரணு சரணு சரணையா
🔤 Saranu Saranu Saranaiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணு சரணு சரணையா கருணாகர நித்திய திரியேகத்துவமே திருவுருவாய் வந்த பர மண்டலாதிகத்தா 1. தவிதிறை வந்தனம் தேவதிசயமே நவசபை வந்தனமிடவரும் நயமே பவ மற மனு வுரு வான சினேகமே திவிய பரமனார் மைந்தன் மனுவேல் ராஜே 2. பரமேசுர வொரு கருத்தரே யோவா மரிய கன்னியாஸ்திரி தருமேசு தேவா திருவவதாரா எமை ரட்சிக்கவே அருள் செய்யும் செய்யு மோசியன்னா மானுவேல் மன்னா 3.அந்தர சொற்கம் யாவும் தந்த சுந்தரமே வந்தன கீர்த்தனம் மகத்துவ மந்திரமே தந்தைப் பிதாவினொரு சொந்தக் குமார வாழ்வே விந்தைத் திருநெல்லை வேதநாயகன் பாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranu Saranu Saranaiyaa Karunaagara Nitthiya Thiriyaegatthuvamae Thiruvuruvaay Vandha Para Mandalaathigatthaa 1. Thavithirai Vandhanam Thaevathisayamae Navasapai Vandhanamidavarum Nayamae Pava Mara Manu Vuru Vaana Sinaegamae Thiviya Paramanaar Maindhan Manuvael Raajae 2. Paramaesura Voru Karuttharae Yovaa Mariya Kanniyaasthiri Tharumaesu Thaevaa Thiruvavathaaraa Emai Ratsikkavae Arul Seyyum Seyyu Mosiyannaa Maanuvael Mannaa 3.andhara Sorkam Yaavum Thandha Sundharamae Vandhana Keertthanam Makatthuva Manthiramae Thanthaip Pithaavinoru Sondhak Kumaara Vaazhvae Vinthaith Thirunellai Vaedhanaayakan Paavae