பாடல் #39033
ஒ லோலம் ஒலோலம் ஒலமே
🔤 O Lolam Ololam Olamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒ லோலம் ஒலோலம் ஒலமே மூலமே மெய்க்கதியே மூவுலகாதி பதியே 1. ஆதியே அமரர் துதி அட்சயக கிருபாநதி நீதியே காதிபதி நின்னருள் செய்வாய் ததி 2. அம்பரா ஞானாதாரா ஆதரி பரமேசுரா தம்பிரா னொருகுமாரா தயை செய்கிருபாகரா 3. சீவனே ஓசியன்னா தேவ பத்திராசன்னா பாவமே விமோசனா பக்கிஷக் கிருபாசனா 4. பத்தர் தொழ னாதியே பாவநரர் ஜாதியே முத்திபெரும் நீதியே முப்பொருளொரு சோதியே 5. வேதநாயகன் பாவா மெய்யோரே யே யோவா பாதம் நம்பினேன் காவா பாக்கியப் பரமதேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Lolam Ololam Olamae Moolamae Meykkathiyae Moovulakaathi Pathiyae 1. Aathiyae Amarar Thuthi Atsayaka Kirupaanathi Neethiyae Kaathibathi Ninnarul Seyvaay Thathi 2. Ambaraa Njaanaathaaraa Aadhari Paramaesuraa Thampiraa Norukumaaraa Thayai Seykirupaagaraa 3. Seevanae Osiyannaa Thaeva Patthiraasannaa Paavamae Vimosanaa Pakkishak Kirupaasanaa 4. Patthar Thozha Naathiyae Paavanarar Jaathiyae Mutthiperum Neethiyae Mupporuloru Sothiyae 5. Vaedhanaayakan Paavaa Meyyorae Yae Yovaa Paadham Nampinaen Kaavaa Paakkiyap Paramathaevaa