பாடல் #3901
வானமும் பூமியும்
🔤 Vaanamum Poomiyum
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.வானமும் பூமியும் வகித்திடுந்தேவே! வளம்நிறை ஆண்டவரே! - தேவரீர், ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை ஈந்ததற்காய்த் தோத்ரம்! 2.பாவம்நிறைந்தோர், பாத்திரமற்றோர், கோவத்துக்கேயுரியர், - வறியர் ஆயினர் எமக்கிவ்வறுப்பை யளித்த ஆண்டவரே, தோத்ரம்! 3.வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை வருடநாற்பது காத்தீர்! - அந்த வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய வானவரே, தோத்ரம்! 4.ஐந்தப்பங்கொண்டை யாயிரம்பேரை அமர்த்திப் போஷித்தீர் - ஐயா! போந்த எம் பசியும் புறமுறச்செய்தீர்; புண்ணியரே, தோத்ரம்! 5.பெரிய உம்நாமம் பேருலகோங்க, வறியவர் மிடியகல, - இவ்வீவை அறிவுடன்காத்தே அருமையாய் ஆளும் நெறியெமக் கீந்தருள்வீர்! 6.திருச்சபைபண்ணை திகழ்பயிர் நாங்கள் தேவரீர் பயிர்க்காரர், - திருவே, ஆவியின் மழையால் ஆக்கிடும், எம்மை அழகிய கதிர்மணியாய்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.vaanamum Poomiyum Vakitthitunthaevae! Valamnirai Aandavarae! - Thaevareer, Eenaraam Emmael Irangki Ivvaruppai Eendhatharkaayth Thothram! 2.paavamnirainthor, Paatthiramarror, Kovatthukkaeyuriyar, - Variyar Aayinar Emakkivvaruppai Yalittha Aandavarae, Thothram! 3.vaana Mannaavai Varushith Thisraelai Varudanaarpathu Kaattheer! - Andha Vallamai Emakkiv Varudamungkaattiya Vaanavarae, Thothram! 4.aindhappangkontai Yaayirampaerai Amartthip Poshittheer - Aiyaa! Pondha Em Pasiyum Puramurachseytheer; Punniyarae, Thothram! 5.periya Umnaamam Paerulakongga, Variyavar Mitiyakala, - Ivveevai Arivudankaatthae Arumaiyaay Aalum Neriyemak Keendharulveer! 6.thirucchapaibannai Thigazhpayir Naanggal Thaevareer Payirkkaarar, - Thiruvae, Aaviyin Mazhaiyaal Aakkitum, Emmai Azhakiya Kathirmaniyaay!