பாடல் #39009
எத்தன நன்மைகள் எந்தன் வாழ்விலே
🎙 கிறிஸ்தவ பாடல்
எத்தன நன்மைகள் எந்தன் வாழ்விலே எனக்காக யாவையும் செய்து முடித்தீரே -2 நன்றி சொல்லி துதிக்கிறேன் நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2 இயேசய்யா இயேசய்யா இயேசய்யா என் இயேசய்யா-2 நம்பின மனிதர்கள் கைவிட்டபோதும் நம்பிக்கையின் நங்கூரமே நன்மைகளை செய்தீரே -2 2. கலங்கி நின்றபோது கண்ணீரை துடைத்தீரே கண்ணீரை மாற்றினீர் களிப்பை தந்தீரே 3. எனக்காய் வந்தீரே என் பாவம் கழுவிட உம் ஜீவன் தந்தீரே வாழ வைத்திட