பாடல் #3895
வான பிதா தந்த ஆஸ்தியிலே
🔤 Vaana Pithaa Thandha Aasthiyilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வான பிதா தந்த ஆஸ்தியிலே ஏழைக்குன் மனம் கோண வேண்டாம் வாங்குவதை விட கொடுப்பதுவே நல்லதென்று கர்த்தர் சொல்லுகிறார். தானம் செய்ய யேசு கேட்கிறாரே கேட்கிறாரே கேட்கிறாரே தானம் செய்ய யேசு கேட்கிறாரே கேட்கிறாரே உங்களை. 2. ஏழைகள் நம்மோடெக் காலமுமே இருப்பதை நாமும் காண்கிறோமே ஏழைக்கிரங்குவோர் கர்த்தருக்குக் கடன் கொடுப்பவர் ஆகவாரே? 3. பூமியில் பொக்கிஷம் என்னத்துக்கு கன்னமிட அது கள்ளருக்கோ? வானத்தில் பொக்கிஷம் சேர்த்து வைத்தால் யேகோவா உன்னை ஆசீர்வதிப்பார். 4. ஆலயத் தூழியர் காணிக்கையை ஆண்டவர் காணிக்கையாக எண்ணு நல் மனதோடதை ரூடவ்ய வேண்டும் நாயனுன் மனதைப் பார்க்கிறாரே. 5. மரம் நட்டுப் பலன் நோக்குவானே மந்தை மேய்த்தவன் பாலுண்ணுவானே தேவ சபையின் நல்வேலை எல்லாம் ஆதரிப்பாரின்றிப் போகலாமோ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vaana Pithaa Thandha Aasthiyilae Aezhaikkun Manam Kona Vaentaam Vaangkuvathai Vida Kotuppathuvae Nallathenru Kartthar Sollukiraar. Thaanam Seyya Yaesu Kaetkiraarae Kaetkiraarae Kaetkiraarae Thaanam Seyya Yaesu Kaetkiraarae Kaetkiraarae Unggalai. 2. Aezhaigal Nammotek Kaalamumae Iruppathai Naamum Kaankiromae Aezhaikkirangkuvor Karttharukkuk Katan Kotuppavar Aagavaarae? 3. Poomiyil Pokkisham Ennatthukku Kannamida Athu Kallarukko? Vaanatthil Pokkisham Saertthu Vaitthaal Yaekovaa Unnai Aaseervathippaar. 4. Aalayath Thoozhiyar Kaanikkaiyai Aandavar Kaanikkaiyaaga Ennu Nal Manathodathai Roodavya Vaentum Naayanun Manathaip Paarkkiraarae. 5. Maram Nattup Palan Nokkuvaanae Manthai Maeytthavan Paalunnuvaanae Thaeva Sapaiyin Nalvaelai Ellaam Aadharippaarinrip Pogalaamo?