பாடல் #3893
வான நகரத்தின்
🔤 Vaana Nakaratthin
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வான நகரதின் மேன்மையென சொலுவோம், கன வலன் நலவருக்கருள். 1.பானொளி ரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள் பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமே; தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும் ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான. - வான 2.அங்குநோய், துன்பம், விசாரம், அக்ரமம், கண்ணீர், தரித்திரம் அற்பமு மிருப்பதில்லை, சொற்பமாகிலும் பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம். - வான 3.அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான அர்ச்சய உடுப்பு, சிரமானதிற் கிரீடம் மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில் வாய்மையாக வீற்றிருப்பர்; தூய்மையான அந்த நல். - வான 4.நேயமுற்பிதாக்கள், தீர்க்கர், நின்மலன் அப்போஸ்தலர்கள் நீதிமான்கள் எல்லவரும் தூதர் நல்லோரும் ஓய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி உன்னதனைப் போற்றுவர்கள்; பன்னரும் சிறப்பதுள்ள. - வான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaana Nakarathin Maenmaiyena Soluvom, Kana Valan Nalavarukkarul. 1.paanoli Rathnanggal Asthipaaramaan Thiruvaasalkal Panniru Mutthukkal Theru Ponninmayamae; Thaenilum Mathuram Thelivir Palinggathaana Aarum Jeevatharuvum Irukkum Sepparum Azhakathaana. - Vaana 2.angkunoy, Thunbam, Visaaram, Akramam, Kanneer, Tharitthiram Arpamu Miruppathillai, Sorpamaakilum Pongkiyae Mucchatthurukkal Porinuk Kizhuppathillai Punniyanaar Sonnathiru Unnatha Erusalaiyaam. - Vaana 3.annakark Kutigal Venmaiyaana Alangkaaramaana Arcchaya Utuppu, Siramaanathir Kireedam Mannavar Polae Aninthu Makimaiyi Naasanatthil Vaaymaiyaaga Veerriruppar; Thooymaiyaana Andha Nal. - Vaana 4.naeyamurpithaakkal, Theerkkar, Ninmalan Apposthalarkal Neethimaankal Ellavarum Thoodhar Nallorum Oyvathinrith Thothra Keedha Uchsidhath Thonimuzhakki Unnathanaip Porruvarkal; Pannarum Sirappathulla. - Vaana