பாடல் #38928
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
🔤 Azhaikkiraar Yesu Aandavar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் – 2 அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2 சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் – 2 வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் – 2 வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaikkiraar Yesu Aandavar Aavalaay Naam Selluvom – 2 Avar Paliyinil Kalanthida Avar Oliyinil Natanthida – 2 Saatsigalaay Enrum Vaazhnthida Innaalilae Thaetiyae Devan Varukiraar Thannaiyae Naalum Tharukiraar Tholkalil Nammaith Thaangkuvaar Thuyarinil Avar Thaerruvaar Sumaigalai Suganggalaaga Maarruvaar Valamudan Vaazhum Vazhiyaik Kaattuvaar – 2 Vaarunggal Orudalaay Inainthituvom Vaanakath Thanthaiyai Naam Vanangkituvom Anpinaal Ulakai Aaluvaar Aaviyaal Nammai Nirappuvaar Amaithiyai Enrum Aruluvaar Aanandham Nenjsil Pozhikuvaar Vitiyalin Keedhamaaga Muzhangkuvaar Vitudhalai Vaazhvai Namakku Vazhangkuvaar – 2 Vaarunggal Orudalaay Inainthituvom Vaanakath Thanthaiyai Naam Vanangkituvom