பாடல் #38875
உம்மையல்லால் இத்தரையில்
🔤 Ummaiyallaal Ittharaiyil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.உம்மையல்லால் இத்தரையில் உற்றதுணை யாருமில்லை பெற்றவரே நீர் இரங்கி பிள்ளை என்னைக் காருமையா 2. கெஞ்சி கெஞ்சி கூப்பிட்ட என் நெஞ்சம் புண்ணா நோகுதையா பஞ்சவடி பரம்பொருளே - தஞ்சம் உந்தன்காயமையா 3.தேவவழி ஏதறியேன் திருசித்தமே செய்தறியேன் வேதமொழி ஒன்றிலுமே சாதனையாய் செய்தறியேன் 4. கெட்டமகன் துட்டனைப்போல் மட்டுமிஞ்சி அலைந்தேனையா எட்டுதிக்கும் உந்தனைப்போல் பட்டவர் பாடு யாரில்லையே 5.குருசிலும்மை ஏற்றினது கொடும்பாவி நானையா வாதைப்பட செய்திட்டவள் (ன்) பாதகி (கன்) என் பாவமையா 6.வார்த்தையிலே உண்மையில்லை செய்கையிலே செம்மையில்லை உள்ளமெல்லாம் கள்ளத்தனம் ஒன்றிலுமே நன்மையில்லை 7. பொய்புரட்டின் பாவத்தினால் பேய் மெய்வருத்தம் மிஞ்சுதய்யா நினைவால் யோனாவைப்போல் பேழைக்குள் யான் மறைந்திருந்தேன் 8. பேர் அகத்தில் நீர் எனக்கு சீர் அமைப்பை செய்திடவே சிந்தினீரே இரத்தமெல்லாம் கல்வாரி மலைதனிலே 9. தாவிவரும் சேயைப்போல சேவிக்கிறேன் உம்பாதமதை பாவி என்னை தூக்கியே நீர் பாவமதை போக்கிடுவீர் 10.நன்றியினால் உள்ளம் மகிழ்ந்து என்றென்றும் கிறிஸ்துவில் நிலைத்திருந்து என் நாமத்தில் கேள் கொடுப்பேன் என்றவர் கொடுத்ததற்காய் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.ummaiyallaal Ittharaiyil Urtrathunai Yaarumillai Pertravarae Neer Irangki Pillai Ennaik Kaarumaiyaa 2. Kenjsi Kenjsi Kooppitta En Nenjjam Punnaa Nokuthaiyaa Panjjavati Paramporulae - Thanjjam Undhankaayamaiyaa 3.thaevavazhi Aedhariyaen Thirusitthamae Seythariyaen Vaedhamozhi Onrilumae Saadhanaiyaay Seythariyaen 4. Kettamakan Thuttanaippol Mattuminjsi Alainthaenaiyaa Ettuthikkum Undhanaippol Pattavar Paatu Yaarillaiyae 5.kurusilummai Aerrinathu Kotumpaavi Naanaiyaa Vaathaippata Seythittaval (n) Paadhaki (kan) En Paavamaiyaa 6.vaartthaiyilae Unmaiyillai Seykaiyilae Semmaiyillai Ullamellaam Kallatthanam Onrilumae Nanmaiyillai 7. Poypurattin Paavatthinaal Paey Meyvaruttham Minjsudhayyaa Ninaivaal Yonaavaippol Paezhaikkul Yaan Marainthirunthaen 8. Paer Agatthil Neer Enakku Seer Amaippai Seythidavae Sinthineerae Ratthamellaam Kalvaari Malaidhanilae 9. Thaavivarum Saeyaippola Saevikkiraen Umpaadhamathai Paavi Ennai Thookkiyae Neer Paavamathai Pokkituveer 10.nanriyinaal Ullam Makizhnthu Enrenrum Kiristhuvil Nilaitthirunthu En Naamatthil Kael Kotuppaen Endravar Kotutthatharkaay Thuthippaen