பாடல் #38867
இயேசு உம்மை நேசிக்கிறார்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
இயேசு உம்மை நேசிக்கிறார் பாசத்தோடே நேசிக்கிறார் இயேசு வண்டை ஓடி வந்தால் குறைகளெல்லாம் தீர்த்திடுவார் வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் கீழாகாமல் நீ மேலாவாய் ஜனத்தின் நடுவிலே உயர்த்தி வைப்பார் உன் தேவை அனைத்தையும் நிறைவாக்குவார் சத்துருக்கள் முன்பு ஒரு பந்தி உனக்கென்று ஆயத்தம் செய்திடுவார் தலையை எண்ணையால் அபிஷேகித்து பாத்திரம் வழிந்திட செய்திடுவார் உன் நோய்கள் எல்லாம் மாற்றிடுவார் ஔஷத தைலத்தை பூசிடுவார் கால்களை மான்கால்கள் போலாக்கி விசுவாசத்தில் உன்னை நிறுத்திடுவார் யேகோவா தேவன் தந்தையாவார் யேகோவா ராப்பா சுகம் தருவார் யேகோவா ஷம்மா கூட வருவார் யேகோவா ஷாலோம் சமாதானமே