பாடல் #38844
ஜெயம் கொடுக்கும் தேவனை
🔤 Jeyam Kotukkum Devanai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயம் கொடுக்கும் தேவனை நான் நித்தம் துதிப்பேன் வாழ்வளிக்கும் கர்த்தரை நான் வாழ்த்திப் பாடுவேன். அல்லேலூயா அல்லேலூயா பாடி மகிழுவேன் ஆனந்த துதியினாலே உயர்த்தி புகழுவேன் அனல் மூட்டும் அபிஷேகத்தால் என்னை நிறைத்தார் ஆராதனை தேவனை நான் துதித்து பாடுவேன் நாளை உந்தன் நாள் என்று எண்ணிவிடாதே நாட்களையும் வீணிலே நீ கழித்துவிடாதே சொந்தமென்று இந்த உலகில் எதையும் சொல்லாதே வெறுமையாக போவோமென்று மறந்துவிடாதே கர்த்தருடைய செயல்களெல்லாம் பெரியவைகளே சுத்தருடைய நடத்துதல்கள் மகத்துவமானதே நித்தியரின் நியாயம் என்றும் நிலைத்து நிற்குமே பக்தர்களின் பேரின்ப பாக்கியமிதே பாவங்களை பாராமல் பற்றிக்கொண்டாரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தாரே இரட்சணிய சந்தோஷத்தை திரும்ப தந்தாரே உற்சாக ஆவி நம்மை தாங்க செய்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyam Kotukkum Devanai Naan Nittham Thuthippaen Vaazhvalikkum Karttharai Naan Vaazhtthip Paatuvaen. Allaelooyaa Allaelooyaa Paati Makizhuvaen Aanandha Thuthiyinaalae Uyartthi Pugazhuvaen Anal Moottum Apishaegatthaal Ennai Niraitthaar Aaraadhanai Devanai Naan Thuthitthu Paatuvaen Naalai Undhan Naal Enru Ennivitaathae Naatkalaiyum Veenilae Nee Kazhitthuvitaathae Sondhamenru Indha Ulakil Ethaiyum Sollaathae Verumaiyaaga Povomenru Maranthuvitaathae Karttharutaiya Seyalkalellaam Periyavaigalae Suttharutaiya Natatthudhalkal Makatthuvamaanathae Nitthiyarin Niyaayam Enrum Nilaitthu Nirkumae Paktharkalin Paerinba Paakkiyamithae Paavanggalai Paaraamal Parrikkontaarae Saabanggalai Neekki Suttha Ullam Thanthaarae Iratsaniya Santhoshatthai Thirumba Thanthaarae Ursaaga Aavi Nammai Thaangga Seythaarae