பாடல் #38840
கர்த்தரின் கை என்றும் குறுகவில்லை
🔤 Karttharin Kai Enrum Kurugavillai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் கை என்றும் குறுகவில்லை கர்த்தரின் வாக்கென்றும் மாறவில்லை கர்த்தரின் நாமத்தில் பெலனடைந்து கர்த்தருக்குள் நாம் வளர்ந்திடுவோம் பொன்னைப் போல் என்னை புடமிட்டாலும் பொன்னாகத் தான் நான் விளங்கிடுவேன் திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டார் தாங்கிட பெலனையும் தந்திடுவார் சத்துருக்கள் முன்பு பந்தி ஒன்று ஆயத்தம் செய்து அழைத்தாரே நேசகொடிகள் என் மேலே பறக்க பாசமாய் என்னை சேர்த்தாரே தீராத நோய்கள் தீர்த்திடும் வைத்தியன் தீமையை நீக்கி இரட்சித்தாரே தீய குணங்கள் முற்றிலும் மாற்றி திபமாக என்னை எரியச் செய்தார் ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்த ஆண்டவர் இயேசுவை துதித்திடுவேன் மாராவின் கசப்பை மதுரமாய் மாற்றின மாதேவன் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Kai Enrum Kurugavillai Karttharin Vaakkenrum Maaravillai Karttharin Naamatthil Pelanatainthu Karttharukkul Naam Valarnthituvom Ponnaip Pol Ennai Pudamittaalum Ponnaagath Thaan Naan Vilangkituvaen Thiraanikku Maelaaga Sothikka Maattaar Thaangkida Pelanaiyum Thanthituvaar Satthurukkal Munpu Panthi Onru Aayattham Seythu Azhaitthaarae Naesakotigal En Maelae Parakka Paasamaay Ennai Saertthaarae Theeraadha Noykal Theertthitum Vaitthiyan Theemaiyai Neekki Iratsitthaarae Theeya Kunanggal Murrilum Maarri Thibamaaga Ennai Eriyach Seythaar Aaraaynthu Mutiyaadha Athisayam Seytha Aandavar Yesuvai Thuthitthituvaen Maaraavin Kasappai Mathuramaay Maarrina Maadevan Yesuvil Makizhnthiruppaen